தமிழகம் எங்கும் நமது குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.... கிருஷ்ணகிகாி மாவட்ட செயலாளா் வேண்டுகோள்....!
அன்பிற்குரிய நர்சரி பள்ளி நிர்வாகிகள் மற்றும் நமது சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த சில நாட்களாக நமது தனியார் பள்ளிகளின் சங்கம் பற்றிய ஆய்வில் எந்த சங்கம் பெரிய சங்கம் என்கிற கணக்கெடுப்பு புலனாய்வு மற்றும் காவல்துறைகளால் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டதில் நாம் சார்ந்திருக்கும் திரு. K.R.நந்தகுமார் அவர்கள் தலைமையிலான சங்கம் தான் அனைத்து மாவட்டத்திலும் பெரும்பகுதி பள்ளி நிர்வாகிகள் அங்கம் வகிக்கும் சங்கமாக உள்ளது என்கிறசெய்தி அரசும் அரசியல் கட்சிகளும் உணர்ந்திருக்கிறார்கள் இதுவே நமது சங்கத்திற்கும் நமது சங்கத்தின் பொதுச்செயலாளர் அவர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி...
மற்றவர்கள் திரும்பிபார்க்கும் அளவிற்கு கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து தனது கடினமான உழைப்பால் உயர்ந்து நிற்கும் பொதுச்செயலாளர் அவர்களே சற்று யோசித்துபாருங்கள் நமது தனியார் பள்ளிகளின் நலனுக்காக கடந்த 30ஆண்டுகளாக குரல் கொடுத்த நீங்கள் ஏன் சட்டசபையில் நமது தனியார் பள்ளிகளின் குரலாக ஒலிக்க கூடாது....
இது ஒரு நல்லவாய்ப்பு நமது சங்கத்தை பற்றிய உயர்வான எண்ணம் அரசு மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் உருவாகியிருக்கிறது இச்சந்தர்பத்தை சரியாக பயன்படுத்தினால் நிச்சியம் நமது குரலை சட்டசபையில் ஒலிக்கசெய்வோம் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது இத்தகைய வாய்ப்பு இப்போது விட்டால் மீண்டும் வராது காரணம் புற்றீசல்போல் புதியபுதிய சங்கங்கள் அரசியல் நகர்வை நோக்கி பயணிக்கிறது... ஆகவே நமது பொதுச்செயலாளர் அவர்கள் யோசித்து நல்ல முடிவை அறிவிப்பாா்கள் என நம்புகிறேன்...
நமது சங்கத்தின் சார்பில் நர்சரி பள்ளிகளை நடுநிலை பள்ளியாக்கும் முயற்சியாக கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்தபோது அமைச்சர் அவர்கள் நமது சங்க நிர்வாகிகளை அமரவைத்து நமது கோரிக்கைகளை கேட்டவிதம் நமக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன் நடுநிலைபள்ளியாக்க வேண்டும் என்கிற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து மீண்டும் மீண்டும் கல்வியமைச்சரை சந்திக்க வேண்டும் அதுமட்டுமல்ல மாண்புமிகு முதல்வர் மற்றும் துணைமுதல்வர் என தொடர்ச்சியாக சந்தித்து நமது நடுநிலை பள்ளிக்கான கோரிக்கையை வழியுறுத்துவோம்
இன்னும் இரண்டு மாதம்மட்டுமே உள்ளது தேர்தல் அறிவிப்பதற்கு நமது தொடர்முயற்சியால் வெற்றிபெருவோம் என்கிற நம்பிக்கையிருக்கிறது....
இறுதியாக நமது நடுநிலைபள்ளிக்கான கோரிக்கையும் நமது பொதுச்செயலாளர் அவர்களுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட்டு தருபவர்களுக்கு நமது சங்கத்தின் ஆதரவு என பகிரங்கமாக அறிவிப்போம்...
பொதுச்செயலாளர் அவர்களே உங்கள் பின்னால் பல்லாயிரம் பள்ளி நிர்வாகிகள், பல லட்சம் ஆசிரியர்கள் அவர்கள் சார்ந்த குடும்பங்கள் அணிவகுத்து நிற்பார்கள்.... பொதுச்செயலாளர் அவர்களின் சேவை நமக்கும் நாட்டு மக்களுக்கும் தேவை என்கிற விருப்பத்தில் இக்கருத்தை பதிவுசெய்திருக்கிறேன்...
நல்லமுடிவை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்....
D.மகேந்திரன்
மாவட்ட செயலாளர்
கிருஷ்ணகிரி