போக்குவரத்து ஆணையாளர் புதிய உத்தரவு
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் போக்குவரத்து அமைச்சர் அவர்களையும் போக்குவரத்து ஆணையாளர் அவர்களையும் நேரில் சந்தித்து சாலையில் ஓடாத காலங்களுக்கு சாலை வரி இருக்கை வரி இன்சூரன்ஸ் எப்சி ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தோம்.
அதற்கு அவர்கள் அனுப்பியுள்ள பதிலில் உங்கள் வாகனம் சாலையில் ஓட வில்லை என்பதற்காக
ஸ்டாப்பேஜ் பர்மிஷன் எஸ். பி. ஆர். அப்ளிகேஷன் மூலம் 172(6) இன் படி உரிய நிறுத்தல் அறிக்கை மோட்டார் வாகன ஆய்வாளர் வழங்கிய பள்ளிகளுக்கு மட்டும் மேற்கண்ட வரிகள் செலுத்த வேண்டாம் என்று போக்குவரத்து ஆணையாளர் கையொப்பமிட்டு பதில் மனுவை நமது மாநில சங்கத்தின் பொதுச்செயலாளர் அவர்களுக்கு அனுப்பி உள்ளதை பள்ளி நிர்வாகிகளின் கனிவான பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்.
அன்புடன் உங்கள்
நந்தகுமார்