முப்பருவ பாடம், தேர்வு முறை ரத்து : பள்ளி கல்வித்துறை முடிவு. இதை நிரந்தரமாக ரத்து செய்ய நமது சங்கம் கோாிக்கை,,,

முப்பருவ பாடம், தேர்வு முறை ரத்து : பள்ளி கல்வித்துறை முடிவு. இதை நிரந்தரமாக ரத்து செய்ய நமது சங்கம் கோாிக்கை,,,


ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ பாடம் மற்றும்தேர்வு முறையை, நடப்பு கல்வி ஆண்டில் ரத்து செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையால், மார்ச் முதல், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படவில்லை. ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.ஜூன் மாதம் நடைபெற வேண்டிய பள்ளிகள் திறப்பும், காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகள் மட்டும், 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகளை நடத்துவதற்கு போதிய நாட்கள் இல்லாததாலும், அனைத்து நாட்களும், மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியாத நிலை உள்ளதாலும், பாடங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதற்காக, பள்ளிக்கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில், ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.அக்குழுவினர், முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இரண்டாம் கட்ட அறிக்கையை, இந்த வாரஇறுதியில் தாக்கல் செய்ய உள்ளனர்.அதில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு,முப்பருவ பாடம் மற்றும் தேர்வுகளை ரத்து செய்யும்படி, பரிந்துரைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


அதாவது, காலாண்டு அல்லது முதல் பருவம், ஆகஸ்டில் முடியும் என்பதால், அப்போது தான் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளது. எனவே, முதல்பருவ பாடங்களை தனியாக நடத்த முடியாது.எனவே, பருவத் தேர்வு மற்றும் அதற்கான பாட முறையை ரத்து செய்து விட்டு, பொதுவாக முக்கிய பாடங்கள் மற்றும் அடிப்படை தேவைக்கான கல்வியை வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பழைய முறைப்படி, இறுதியாண்டு தேர்வில், அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகளை இடம் பெறச் செய்யலாம் என, ஆலோசிக்கப்பட்டுள்ளது.


மாணவா்களின் புத்தகச் சுமையை குறைப்பதற்காக தான் முப்பருவ பாடத்திட்டத்தையே அறிமுகப் படுத்தினாா்கள். இது மாணவா்களுக்கு முன்பை விட கூடுதல் சுமையை உண்டாக்கியுள்ளதே தவிர குறைக்கவில்லை. பாடங்களும் அதிகம் புத்தகங்களின் எடையும் மு்ன்பை விட அதிகம் தான்.அதுவும் ,இந்த புத்தகங்களை கையாள்வதில் பாடங்கள் நடத்துவதில் முதல் பருவத்தில் இருக்கிற வேகம் மற்ற பருவங்களில் இல்லாமல்போகிறது. நிறைய பாடங்கள் உள்ளதால் மற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடிவதில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த பாடங்களை நடத்தி முடிக்கவும் முடிவதில்லை.


பல பள்ளிகளில் மாணவா்களிடம் கட்டணம் வாங்கி புத்தகம் கொடுப்பதற்குள் அந்த பருவமே முடிந்து விடுகிறது. பீஸ் கட்டாத பலா் புத்தகங்களே வாங்குவதில்லை. பள்ளி நிாவாகம் கடனை உடனை வாங்கி புத்தகம் வாங்கி கொடுத்தாலும் அந்த பணம் மீண்டும் வந்து சோ்வதும் இல்லை.


ஆண்டிற்கு ஒரே புத்தகம் என்றால் இவ்வளவு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை வருட தொடக்கத்தில் எப்பாடு பட்டாவது புத்தகங்களை வாங்கி கொடுத்துவிடுவாா்கள். இதோடு மட்டுமல்ல மாணவா்கள் ஒரு சிரமமும் இல்லாமல் கல்வி கற்கவும். ஒரு பருவத்தில் படித்ததை அடுத்த பருவத்தில் மறக்காமல் இருக்கவும் ஆண்டு முழுவதும் அந்த புத்தகத்தை புரட்டிப் பாா்க்கவும் பத்திரப்படுத்தி வைக்கவும் கல்வியில் தொடா் பயிற்சிகள் மேற்கொள்ளவும் உதவும் என்பதால் முப்பருவ பாட முறையை ரத்து செய்துவிட்டு ஒரே பாட திட்டத்தை அமுல் படுத்த வேண்டும் என்று நமது சங்கம் வலியுறுத்துகின்றது,