இந்த தேர்தல் நேரத்திலாவது தனியார் பள்ளிகளையும், தனியார் பள்ளி ஆசிரியர் பெருமக்களையும் தமிழக அரசு கண்டுகொள்ளுமா ?
பள்ளி நிர்வாகிகள் கவனம் ஈர்க்கப்படுகிறது......
5 நிமிடம் செலவழித்து படித்து புரிந்துகொண்டு அனைவருக்கும் புரிய வைத்து அரசின் கவனம் ஈர்க்க வேண்டும் ....
கே ஆர் நந்தகுமார் வேண்டுகோள்..
இந்த தேர்தல் நேரத்திலாவது தனியார் பள்ளிகளையும் தனியார் பள்ளி ஆசிரியர் பெருமக்களையும், கண்டுகொள்ளுமா தமிழக அரசு ?
தனியார் பள்ளிகளால் மத்திய மாநில அரசுகளுக்கு 5 காசுகள் கூட செலவு இல்லை.
அரசின் பெரும் சுமையை குறைத்து பணிச் சுமையை குறைத்து கோடிக்கணக்கான மாணவர்களுக்கு தரமான கல்வி தந்து
2 கோடி பேருக்கும் மேலான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை தந்து ....
தாய்த்திரு நாட்டை பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் உயர்த்தி உன்னத நிலையை அடைய செய்திருக்கும் தனியார் பள்ளிகளின் இன்றைய வேதனைகளை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கின்றோம்.
மத்திய மாநில அரசுகளின் கவனம் உடனடியாக ஈர்க்கப்பட வேண்டும் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்..
முதலில் நாம் அதை புரிந்து கொள்வோம் தெரிந்து கொள்வோம். வாருங்கள்...
1.இந்தியாவில் மொத்த பள்ளி மாணவர்கள் 25 கோடி பேர்.
2.அதில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 12.5 கோடி பேர்.
3.70% பட்ஜெட் பிரைவேட் ஸ்கூல் எனப்படும் குறைந்த கட்டணம் பெறும் பள்ளிகள்
ரூ 15000/-க்கும் குறைவாக கல்விக் கட்டணம் பெறுகின்ற தனியார் பள்ளிகள்.
4.அரசு ஆரம்பபள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 2.38 கோடி பேர்.
5.நர்சரி பிரைமரி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 2.11 கோடி பேர்.
covid-19 மற்றும் அதனுடைய தாக்கத்தினால்
லாக் டவுன் மார்ச் மாதத்தில் ஆரம்பித்தது. அதன்பிறகு பட்ஜெட் பிரைவேட் ஸ்கூல் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சொல்லிமாளாது.
HEALTH CRICIS, ECONOMIC CRICIS,
EDUCATIONAL CRICIS& LEARNING CRICIS
என பல்வேறு சமுக அவலங்கள் சூழ்ந்த போதும் இவர்கள் கிட்டத்தட்ட 3000 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை மூட வைத்திருக்கிறது.
.தனியார் பள்ளி நிர்வாகிகள் தற்கொலை மற்றும் தனியார் பள்ளி ஆசிரிய பெருமக்கள் பணிகள் மாறி
வேறு வேறு கூலி வேலைகளுக்கு செல்லும் அவல நிலை ஆசிரியர் -மாணவர் -உறவில்- விரிசல் .
தேசிய தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு எடுத்த SURVEY சொல்லுவது என்னவென்றால் இந்த covid-19 கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட நேரத்தில் கல்வி கட்டணம் எத்தனை சதவிகிதம் பெற்றோர்களால் செலுத்தப்பட்டுள்ளது என்பதை தெளிவாக காண்பிக்கின்றது.
மொத்தம்22 மாநிலங்கள் மாநிலங்களில், 3 690 பள்ளிகளில்
16 58 ,377 மாணவர்களிடம் இந்த புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டன.
A) ஆந்திரா 497 பள்ளிகள் 153 405 மாணவர்கள் கட்டிய கல்வி கட்டணம் 15 சதவீதம்
B)சட்டீஸ்கர் 68 பள்ளிகள் 41 508 மாணவர்கள் 10 சதவீதம் கல்வி கட்டணம் கட்டி உள்ளார்கள்.
C) டெல்லி 89 பள்ளிகளில் 41009 மாணவர்கள் கல்வி கட்டணம் கட்டியவர்கள் 25.8 சதவீதம்
D) ஹரியானா 745 பள்ளிகள் 3 லட்சத்து 46 ஆயிரத்து 898 மாணவர்கள் 19% சதவிகிதம்.
E) இமாச்சல் பிரதேசம் 280 பள்ளிகளில் 280339 மாணவர்கள் 15 சதவீதமும் கல்வி கட்டணம் கட்டியுள்ளனர்.
F)ஜம்மு-காஷ்மீரில் 558 பள்ளிகள் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 151 மாணவர்கள் 10 சதவீதம் கல்வி கட்டணம் கட்டியுள்ளனர்.
G) நாகலாந்து 137 பள்ளிகள் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 339 மாணவர்கள் 20% கல்வி கட்டணம்.
H) பஞ்சாப் 82 பள்ளிகள் 72 774 மாணவர்கள் 8% சதவிகிதம் கல்வி கட்டணம் மட்டுமே வசூல் ஆனதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது. பள்ளிகள் திறக்கும் எண்ணமே இப்பொழுது இல்லை என்று தொடர்ந்து பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களே பலமுறை சொன்னதும்.
கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாணை போட்டதால் பெற்றோர்கள் கல்வி கட்டணம் கட்ட மறுத்து தனியார் பள்ளி நிர்வாகங்கள் வாழ்விழந்து தவித்தபோது பட்டினி போராட்டம் நடத்தியது மட்டுமல்லாமல் நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு இந்த மாத இறுதிக்குள் 75 சதவீத கல்வி கட்டணம் பெற்றுக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழ்நாடு முழுக்க 25% கல்வி கட்டணம் கூட வசூலிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை..
இந்த கொரோனா காலத்திலாவது தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தருவதுபோல் பாடப்புத்தகங்கள் அரசு தர மறுத்த போதும் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் இரும்பு கடையில் எடைக்கு போட்ட போதும் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அரசின் புத்தகங்களை வாங்கி கொடுத்து தரமான கல்வியை நாள்தோறும் ஆன்லைன் மூலம் கற்றுத் தந்து காலாண்டு அரையாண்டு தேர்வையும்
மாதிரி தேர்வுகளையும் நடத்தி முடித்து விட்டோம்.
பெற்றோர்கள் பணம் கட்ட மருத்தும் கட்ட முடியாமலும்
பாதி பேர் அரசின் கணக்குப்படி 15 லட்சம் பேர் அரசுப் பள்ளியில்
இ எம். ஐ. எஸ் நம்பரை வைத்துக்கொண்டும் ஆதார் கார்டை வைத்துக்கொண்டும் தனியார் பள்ளி களுக்கு கட்ட வேண்டிய பழைய கல்வி கட்டண பாக்கியை கட்டாமல் டி. சி. வாங்காமல் போய் அரசு பள்ளியில் சேர்ந்து விட்டார்கள்...
என்கிற வேதனையான செய்தியோடு .....
நிதி ஆதாரங்கள் குறைந்ததால் அரசின் உதவி கிடைக்காமல் தடுமாறும் தனியார் பள்ளிகள். ....
தேர்தல் வரும் சமயத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி குடும்பத்தில் உள்ளவர்கள் வேலையிழந்து வாழ்விழந்து வெளியே சொல்ல முடியாமல் ஆசிரியர்களும் ...
பள்ளி கட்டணங்கள் வசூலிக்கமுடியாமல் பள்ளி நிர்வாகிகள் தத்தளித்தும் மாறாக RENT,
EMI... BANK DUES ,
SCHOOL BUS Tax
Bus Instalment
Bus INSURANCE
TEACHERS SALARY
P.F..ESI
PROPERTY TAX
ELECTRIC BILLS
WATER TAX இன்னும் பலவிதமான கட்டணங்கள் தனியார் பள்ளிகள் கட்டவேண்டும் என தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகள் பூட்டியிருக்கும் இவ்வேளையில் மாணவர்கள் அதிகமாக கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் இவற்றைச் சமாளிப்பது மிக கஷ்டமாக இருக்கிறது .
தனியார்பள்ளி ஆசிரியர்களின் நிலை பேசமுடியவில்லை. தமிழகஅரசோ மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது.
அரசு என்பது அரசு பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் ஒன்றுதான்.எனவே இந்த நேரத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கென ஏதாவது ஒருவகையில் covid-19 ஆதார நிதியில் கிட்டத்தட்ட ஏழரை லட்சம் ஆசிரிய பெருமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உதவ முன் வரவேண்டும்.
7.5 லட்சம் ஆசிரியர் குடும்பங்கள் வறுமையில் வாடுகிறபோது ,
அவர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறைந்தது 35 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
அவர்களோடு ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் ஓட்டுநர்களின் உதவியாளர்கள் ஆயாக்கள் என்று வேறு வேலை செய்யத் தெரியாமல் ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்படும் நிலையை இந்த கொடிய கொரோனா நோய்த்தொற்று காலத்து அவலங்கள் சொல்லிமாலாது.
இவர்களுக்கு அரசிடமிருந்து ஐந்து காசுகள் கூட நிதி உதவி தராமல் திக்கு தெரியாத காட்டில் தடுமாறுகிறார்கள்.
உலகமே விழித்துக்கொண்டு கொரானாவை விரட்டியடித்துவிட்டு...
எல்லாம் திறந்துவிட்டு பள்ளிகளை மட்டும் திறக்க மறுப்பதா... பாடங்கள் நடத்த முடியாமல்... மாணவர்கள் படிக்க முடியாமல்... ஆசிரியர்களும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களும் எப்பொழுது விடியும் என்று தெரியாமல் விழி பிதுங்கி வழி தெரியாமல் வாழ்விழந்து நிற்கிறார்கள்.
அவர்களுக்காக ஒரு ஆதரவு குரல் கூட கேட்கவில்லை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உதிரிக் கட்சிகளும் அவர்கள் சுயலாபத்திற்காக பள்ளிகளை திறக்காமல் எதிர்கால சமுதாயத்தை பதம்பார்த்து வருகிறார்கள்..
ஒரு நாட்டை அழிக்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் கல்வித் திட்டத்தை பாழ்படுத்திவிட்டாள் மீண்டு எழுவது மிகவும் சிரமம் என்பது வரலாறு.
எனவே படிப்பதையும் சிந்திப்பதையும் நிறுத்துவதற்கான சீர்கேட்டை செய்யத் தொடங்கி விட்டார்கள்....
என்றே எண்ணத் தோன்றுகிறது.
தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது மழைக்காலமும் வெயில் காலமும் நோய் காலமும்
விழா காலமும் முடிந்து நாள்தோறும் லட்சக்கணக்கானோர் கூடி கலையத்தான் செய்கிறார்கள்....
ஆனால் பள்ளிகள் மட்டும் திறக்க அனுமதி இல்லையாம்.
இது என்ன நியாயம் தேர்தல் சமயத்தில் தமிழக அரசு என்ன உதவி செய்யும் என வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் .
டாஸ்மார்க் பார்க் மால் பீச் சினிமா தியேட்டர் பொது வளாகங்கள் மருத்துவமனைகள் எல்லாம் திறக்கப்பட்டுள்ள இந்த நிலையில்,
பள்ளிகள் திறக்கப்படுமா ? எப்பொழுதுதான் சீரடையும் என கவலை கொள்ளும் தனியார் பள்ளிகளும் தனியார் பள்ளி ஆசிரிய பெருமக்களும் கவலையோடு தமிழக அரசின் கருணைமிக்க ஆணைக்காக இந்த தேர்தல் சமயத்தில் காத்திருக்கிறோம்.
இனியும் காலம் தாமதித்தால் பெற்றோர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகிகளும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி நடுத்தெருவுக்கு வந்து போராடி அரசின் கவனம் ஈர்க்கும் போது தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் முன்னாள் இன்னால் மாணவர்கள் என ஒன்றரை கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட ஒரு மாபெரும் சமூகம் எதிர்வினை ஆற்றும் போது ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் ஏற்றம் இருக்காது என்பதை உணர வேண்டும்..
காலத்தே செய்யவேண்டியதை செய்ய வேண்டும் காலம் கடந்தால் காரியம் கை கூடாது என்பதை உணர்ந்து உங்களுக்கு தேர்தல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இன்றைய மாணவனின் பொதுத்தேர்வுகளும்.
இது மாணவனின் எதிர்கால வாழ்வை தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் நாட்களாகும்.
ஜீரோ இயர் இல்லை என்று சொல்லி விட்டீர்கள் காலாண்டு அரையாண்டுத் தேர்வுகள் நடத்தவில்லை.
முழு ஆண்டுத்தேர்வும் முழுதாகநடக்குமா என்று தெரியவில்லை. எத்தனை பாடங்கள் வைத்திருக்கிறீர்கள் எவ்வளவு பாடத்தைப் படிக்க வேண்டும் என்கிற விவரத்தை கூட இந்த கல்வியாண்டு முடிவதற்குள்ளாகவே நீங்கள் சொல்வீர்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எதிர்கால கல்வித் திட்ட மும் நிகழ்கால கல்வித் திட்டமும் அறிவிக்காத பள்ளிக் கல்வித் திட்டம் இந்த ஆண்டும் திட்டமிடாமல் போய்விடுமோ பள்ளிநிர்வாகிகளே நீங்களாவது திட்டமிடுங்கள் நீங்களும் சோம்பிக் கிடந்தால் .....
நோ ஸ்கூல்
நோ எக்ஸாம்
நோ பீஸ்
ஆல் பாஸ் என்று அறிவித்து விட்டால் அது மீண்டும் இந்த சமூகத்துக்கு செய்யும் மாபெரும் சீர்கேடு என்பதை உணருங்கள்.
அரசு பள்ளி ஆசிரியர்களும்
எது குறித்தும் கவலைப்படாமல் ஆன்லைன் கல்விக்கும் பொதுத்தேர்வுக்கு பள்ளி திறப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு தமிழகத்தில் நாள்தோறும்
96 கோடி ரூபாய் மாத சம்பளமாக பெற்றுக்கொண்டு எதிர்கால மாணவனின்
கல்விக் கண்ணை திறக்காமல் தற்பெருமை பேசிக்கொண்டு அரசோ... எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்து விட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடுகளை அள்ளித் தெளித்துவிட்டு தரமான கல்வி தருவதை உறுதி செய்யாமல்
தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வு குறித்து சிந்திக்காமல்... மாபெரும் பாவத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நாம் எல்லோரும் கல்வியாளர்கள் நம் பாரத தேசம்
பாழ் படாமல்
பட்டுப் போகாமல்
நம் மாணவர்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது .
நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் நல்ல தரமான கல்வியை கற்றுத்தர பாடுபடுவோம். வெற்றி பெறுவோம்... வாரீர் என்று வணங்கி வரவேற்கின்றேன்.
நன்றியுடன்....
என்றும் கல்விப் பணியில் உங்கள்
கே. ஆர். நந்தகுமார்
மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.