பூஜ்ஜியம் கல்வியாண்டு சாத்தியமில்லை

 பூஜ்ஜியம் கல்வியாண்டு சாத்தியமில்லை



தமிழகத்தில் தொடர்ந்து பள்ளிகள் இயங்காததால் இந்த கல்வியாண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக செயல்படுத்தும் வாய்ப்புகள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இது அமைச்சர் போகிறபோக்கில் யாரோ ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் மட்டும்தான். ஆனால் ஒட்டு மொத்த ஊடகங்களும் ஒன்று சேர்ந்து கொண்டு இதை ஒரு பெரிய செய்தியாக்கி மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்ப வைத்துள்ளது.

பூஜ்ஜியம் கல்வியாண்டு என்பது பள்ளிகளில் எந்த ஒரு செயல்பாடும் நடக்காமல் இருந்தால் தான் அதை பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிக்க முடியும். இதை ஒரு தனிப்பட்ட பள்ளியோ மாநிலமும் பள்ளிக்கல்வித்துறை எடுக்கின்ற முடிவு முடியாதது.

இது பள்ளிக்கல்வித் துறை உயர்கல்வித் துறையும் சேர்ந்து எடுக்க வேண்டிய ஒரு முடிவு அதுவும் மாநில அரசும் மத்திய அரசும் இது சம்பந்தப்பட்டுள்ளது. இவர்கள் யாரும் இதைப் பற்றி பேசாத போது ஊடகங்களில் ஊகித்துக் கொண்டு ஒரு செய்தியை வெளியிட்டால் அதற்கு அரசு என்ன செய்யும்

இதை எந்த பெற்றோரும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள் ஏன் என்று சொன்னால் அவர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பு வீணாக போய் விடக் கூடாது என்பதற்காக கடனை உடனை வாங்கி ஆயிரக்கணக்கில் கட்டணம் கட்டியிருக்கிறார்கள் ஆன்லைன் கல்வி க்காக ஆண்ட்ராய்டு போனை வாங்கி கொடுத்திருக்கிறார்கள்படிக்காமலே பாஸ்போட கேட்டவர்கள் பணம் கட்டி விட்டு சும்மாவா இருப்பார்கள். எந்த பெற்றோரும் தம் பிள்ளைகளின் ஒருவருடம் வீணாவதை விரும்பமாட்டார்கள்.

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் இருக்கின்றது எனவே நேரமில்லை என்று சொல்லி பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்ற அரசியல் கட்சிகள் மாணவர்களின் நலனில் அக்கறை காட்டாமல் இருப்பது வேதனையாக உள்ளது. 

இவர் பொதுத் தேர்தல் எவ்வளவு முக்கியமோ அதே போன்று மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் கல்வியும் முக்கியம். 

இனியும் Corona காரணம் காட்டி பள்ளிகளை மூடி வைத்துக் கொண்டு மாணவர்களின் கல்வி உரிமையை பறித்துக் கொண்டிருந்தால் பூஜ்ஜியம் ஆகப்போவது மாணவர்களின் கல்வி மட்டுமல்ல ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்காலமும் தான்.

எனவே இனி யார் எந்த முடிவெடுத்தாலும் அது எங்கள் கையில் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் .