இந்த புத்தாண்டாவது இனிதாக இருக்குமா.....?
கிழிக்க படாமலேயே பல Calenderகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
2020 போனதே தெரியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும்போது புதிய சிந்தனைகளோடு அதை நாம் எதிர்பார்க்கின்றோம் . ஒன்றுமே நடக்காத போது அதை வெறுத்து ஒதுக்குகிறோம்.
2020 உலகத்திற்கு சோதனையான \ காலகட்டம். இந்த வருடத்தில் நமக்கு எத்தனை போராட்டங்கள், எத்தனை பிரச்சனைகள், எத்தனை தடைகள், எத்தனை தாமதங்கள் எத்தனை வேதனைகள் எத்தனை வெறுப்புகள் அத்தனையும் தாண்டி வந்துள்ளோம்
ஏனென்று சொன்னால் 2020 வளர்ச்சிக்கான ஆண்டாக எடுத்துக் கொள்ளாமல் உயிர் வாழ்வதற்கான ஆண்டாக மாற்றிக் கொண்டோம்.
இந்த ஏழு எட்டு மாதங்களில் Corona வந்து நம்மை பாதித்ததை விட ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நிறைய நம்மை பாதித்து விட்டார்கள்.
கடந்துபோன 365 நாட்களும் நமக்கு சந்தோசத்தை தரவில்லை அது துக்கத்தையும், சோகத்தையும் மட்டுமே கொடுத்தாலும் அதை நாம் மகிழ்ச்சியாகவே வழியனுப்பி வைப்போம்.
2020ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று அப்துல் கலாம் கனவு கண்டார் அவரின் கனவு கானல் நீராகிப் போனது. கடந்த ஆண்டில் நாம் உயிர் பிழைத்தது ஆச்சரியம் தான்...!
புதிதாக பிறந்துள்ள இந்த 2021 ஆம் ஆண்டை அன்போடு வரவேற்போம்.
டிசம்பர் 31ஆம் தேதி மாதக் கடைசி வருட கடைசி மட்டுமல்ல நம் துக்கம் துயரம் கஷ்டம் சோகம் தோல்வி என எல்லாவற்றுக்கும் கடைசி நாளாக அமையட்டும்.
இந்த புதிய ஆண்டில் நமக்கு எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.
ஏன் என்று சொன்னால் கடந்த ஆண்டு நாம் நிறைய எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போய் விட்டோம்.
இந்த நிலையில் இன்னும் நம்மை டென்ஷன் ஆக்குகிறார்கள். 2020 டென்ஷன் ஆம் 21 எக்ஸ்டென்ஷன் ஆம். Corena இரண்டாவது அலை வரப்போகிறது என்று எத்தனை பயமுறுத்தல்கள் அத்தனையும் தாண்டி நாம் வெளிவந்துவிடும்
இனி நமக்கு E Passம் வேண்டாம் நமது மாணவர்களுக்கு All Pass ம் வேண்டாம்.
இந்த புத்தாண்டில் பாழடைந்து கிடக்கும் நமது பள்ளிகளை புதுப்பிப்போம் வாருங்கள் நமது மாணவர்களுக்கு நல்ல கல்வியை தாருங்கள்...
கனவுகளை சுமந்து
கண்ணீர் சிந்துவதை விட
லட்சியங்களை சுமந்து
ரத்தம் சிந்துங்கள்
புன்னகைப்பூத்து புத்துணர்வு பெறுவோம்..!
புத்தாண்டில் பள்ளிகளை திறப்போம்....!!.