ஜனவரி 9ஆம் தேதி தருமபுரி மாவட்ட கூட்டம்

ஜனவரி 9ஆம் தேதி தருமபுரி மாவட்ட கூட்டம்

தர்மபுரி மாவட்ட நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

 நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.

 வருகின்ற ஒன்பதாம் தேதி சனிக்கிழமை காலை சரியாக பத்து மணிக்கு தர்மபுரி  சேலம் மெயின் ரோட்டில்  ரயில்வே கேட் அருகில் உள்ள  பாலாஜி நர்சரி பிரைமரி பள்ளி கலையரங்கில்  தர்மபுரி மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு

பாராட்டு விழா மற்றும் விருதுகளுடன் விருந்தும் வழங்கி கௌரவிக்க விரும்பி உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

 தலைமை.. தர்மபுரி மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார் முனுசாமி குணசேகரன் கிரீன் பார்க் முனிரத்தினம் கே.ஆர். ரவிச்சந்திரன் சிறப்புரை ....நமது சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே. ஆர். நந்தகுமார் மாநிலத் துணைத் தலைவர்கள் முனைவர். சீனி .திருமால் முருகன். பச்சமுத்து பி. பாஸ்கர் உயர்மட்டக்குழு உறுப்பினர் ஆக்ஸ்போர்டு மஹேந்திரன் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர். பி. எஸ். ஜி. கணேசன் 

வாழ்த்துரை....  

தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலர்கள்..

அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் விருதுகள் விருந்து வழங்கி நமது பள்ளிகளின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசி 

நல்ல முடிவு எடுத்து உடனடியாக பள்ளிகள் திறக்க திட்டமிட நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் விழாக் குழுவின் சார்பில் இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

 அழைப்பில் மகிழும் 

தர்மபுரி மாவட்ட நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகள்.