ஜனவரி 11 முதல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – மாநில அரசு அறிவிப்பு!!
ஒடிஸா மாநிலத்தில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அம்மாநில அரசின் உயர்கல்வித்துறை நேற்று அறிவிப்பு (ஜனவரி 3) வெளியிட்டது.
கல்லூரிகள் திறப்பு:
உலகம் முழுவதும் கொரோனா நோய் அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. சில மாநிலங்களில் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. தற்போது ஒடிஸா மாநிலத்திலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வருகிற ஜனவரி 11-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஒடிஸா அரசு சார்பாக உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், “இறுதியாண்டு படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் எதிரிகாலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் நலன் கருதி வருகிற ஜனவரி 11 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்த மாணவர்களுக்கான போன செமஸ்டர் தேர்வுகள் மார்ச் 16 முதல் 31 வரை நடைபெற உள்ளது. மேலும் கடைசி செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 16 முதல் 30 வரை நடைபெற உள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் ஒடிஸா மாநிலத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.