RTE கல்வி கட்டண குளறுபடிகள்..... தவிக்கும் தனியார் பள்ளிகள்......
2019 20 ஆம் ஆண்டிற்கான RTE கல்வி கட்டண பாக்கி டிசம்பர் 9ஆம் தேதி முதல் அனைத்து தனியார் பள்ளிகளின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்பட்டு வருகிறது
இதில் தற்போது பெரும் குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றது
60,000, 70,000 வரவு வைக்க வேண்டிய பள்ளி கணக்குகளில் 9 லட்சம் 10 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது அதேபோன்று 5 லட்சம் 10 லட்சம் வரவு வைக்க வேண்டிய பள்ளி கணக்குகளில் வெறும் முப்பதாயிரம் நாற்பதாயிரம் மட்டுமே வரவு வைத்துள்ளனர்
சில பள்ளிகளுக்கு 20 லட்சம் 30 லட்சம் 50 லட்சம் 80 லட்சம் என்று ஒரு வரையறை இல்லாமல் தான்தோன்றித்தனமாக வரவு வைத்துள்ளார்கள் இதனால் சிலர் ஆச்சரியம் அடைந்தாலும் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
தங்களுக்கு வரவேண்டிய பணம் இவ்வளவுதானா...? மீதி பணம் வருமா...? வராதா...? என்கிற அசசத்தில் இருக்கின்றனர்.
கொரோனா காலத்தில் கடந்த 8 மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்தி வரும் நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகிகள் இந்த RTE பணத்தை எதிர்பார்த்து மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அவர்களின் மன வருத்தத்தை வார்த்தைகளால் சொல்லி அளவிட முடியாது.
RTE பணம் இன்று வரும் நாளை வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த அவர்களுக்கு இந்த வரவு பேரிடியாக அமைந்துள்ளது
இந்த குழப்பத்திற்கு யார் காரணம்? அதிகமாக வரவு வைத்த பள்ளிகளில் இருந்து மீதி பணத்தை எப்படி பெறப் போகிறார்கள் ...?எப்போது பெறப் போகிறார்கள்....? அதேபோன்று குறைவாக வரவு வைத்த பள்ளிகளுக்கு மீதித் தொகையை எப்போது போட போகிறார்கள்.?
பள்ளிக்கல்வித்துறை இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி கட்டணம் குறைவாக வரவு வைத்துள்ள பள்ளிகளுக்கு பாக்கியுள்ள தொகையை உடனே செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கேஆர் நந்தகுமார்
மாநில பொதுச்செயலாளர்.