வரலாற்றுச் சாதனை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு அங்கீகாரம்
வரலாற்றுச் சாதனையாக நமது நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு முதன்முறையாக திருநெல்வேலி , கன்னியாகுமரி, தூத்துக்குடி , விருதுநகர், தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் அங்கீகாரங்களை வாரி வழங்க வருகை தந்திருக்கின்ற மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை நமது சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம் கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரியில் வைத்து வரவேற்று நமது கோரிக்கைகளை எடுத்துச் சொல்லி ஏற்கனவே விடுத்த கோரிக்கையினை நிறைவேற்றுவதாக இந்த விழா எடுக்கப்பட்டுள்ளது என்பதற்காக அமைச்சர் அவர்களுக்கு நன்றி கூறியபோது
அருகில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருமதி ஞான கௌரி அவர்களும் கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் அவர்களும் உடன் இருந்தனர் அத்தோடு நேஷனல் பொறியியல் கல்லூரி சேர்மன் அவர்களும் சேர்ந்து அமைச்சர் அவர்களை சந்தித்து நர்சரி பிரைமரி,மெட்ரிகுலேசன், மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, சிபிஎஸ்இ பள்ளிகளுக்குமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுவதற்காக நாளைய தினம் நமது விழாவிற்கு முன்னதாக அமைச்சர் அவர்களை சந்திக்க பொதுச் செயலாளர் நந்தகுமார் அவர்களும் மாநில தலைவர் கனகராஜ் ஐயா அவர்களும் வருகை தர இருக்கிறார்கள் என்ற செய்தியை தெரிவித்த போது எடுத்த படம்