திருவண்ணாமலை...ல் பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுவிழா ..

திருவண்ணாமலை...ல் பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுவிழா ..

மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..

 நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.

 வருகின்ற சனிக்கிழமை டிசம்பர் 19ஆம் தேதி 2020 காலை சரியாக பத்து மணி முதல் ஒரு மணி வரை திருவண்ணாமலை எஸ். ஆர். ஜி. டி. எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில்  நடைபெறும்..  

 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில்....

 பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுவிழா ....

நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகக்கிட....

பழைய பள்ளி கட்டிடங்களுக்கு டிடிசிபி கட்டிட அனுமதி கேட்பதை கைவிட.. ...

மூன்றாண்டு அங்கீகாரத்தை ஐந்தாண்டுகளாக்கிட அங்கீகாரம்பெற்று 

10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்வழங்கிட..

அங்கீகாரம் வழங்கும் முறையை ஆன்லைனில் வழங்கிட வேண்டும் எனும் அரசாணையை அமல்படுத்திட.....

 தனியார் சுயநிதி பள்ளிகள் இயக்குனரகம் தொடங்கிட போடப்பட்ட அரசாணையை அமல்படுத்திட ....

அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதையே அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி கட்டணமாகவும் 

ஆர். டி. இ. கல்வி கட்டணமாகவும் நிர்ணயிக்க வேண்டி நடைபெறும் மாநில அளவிலான கோரிக்கை மாநாட்டில் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறோம்.

 இம்மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சண்முகம் சாமுவேல் அவர்கள் தலைமையில் ரகோத்தமன் அவர்கள் வரவேற்புரையாற்றிட மாநிலத் தலைவர் பேராசிரியர். ஏ. கனகராஜ் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் மாநில பொருளாளர் ஆர். நடராஜன் மற்றும் மாநில மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

 இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகிகள் செய்து வருகின்றனர் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் சங்கத் தலைவர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.

அழைப்பில் மகிழும் 

திருவண்ணாமலை மாவட்ட நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகள்