தமிழக கல்வித் துறையின் அவலநிலை ! பழைய இரும்பு கடையில் பாடப்புத்தகங்கள்

 தமிழக கல்வித் துறையின் அவலநிலை ! பழைய இரும்பு கடையில் பாடப்புத்தகங்கள்



மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் முத்து வக்கீல் சாலையில் இயங்கி வரும் பழைய இரும்பு கடையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் 5 டன்னுக்கும் மேலாக பழைய இரும்பு கடையில் விற்பனைக்கு வந்துள்ளன.

தற்போது ஆட்சி நிர்வாகமும், கல்வித்துறை நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் விசாரித்து வருகின்றனர். இந்த செயலில் கல்வித் துறையை சார்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பதாக தெரிய வருகிறது. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகங்களை உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்காமல் காலம் கடந்த பின் காசுக்காக பழைய இரும்பு கடையில் கொண்டு வந்து கொட்டியுள்ளது கல்வித் துறை.

மக்களின் வரிப்பணம் பாழ் !

ஏழை மாணவர்களின் கல்வி பாழ் !!

 இந்த புத்தக செய்தியை ஒரு பெரிய செய்தியாக்கி தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு இலவச புத்தகங்களை தருவதில்லை.

அரசு பள்ளிகளில் தரும் இலவச புத்தகம் முழுமையாக மாணவர்களுக்கு சேரவில்லை.. என்பதற்கு இது ஒரு உதாரணம்.

 சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரியாமல் எப்படி இப்புத்தகங்கள் இரும்புக் கடைக்கு எடை போடப்பட்டு இருப்பார்கள்.

 மக்கள் வரிப்பணம் எப்படி வீணாகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் ..

இந்த கொடிய நோய் தொற்று காலத்தில் மட்டுமாவது தனியார் பள்ளிகளுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கியிருந்தால் அரசுக்கு எவ்வளவு நல்ல பெயர் வந்திருக்கும்.

நாம் சொன்னால் கேட்பார்களா கெட்ட பெயர் வரும் போது தான் தெரியும்.

 வேலையே செய்யாமல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு 96 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள்.

 எப்பொழுது பள்ளி திறந்தால் என்ன திறக்கவில்லை என்றால் என்ன..

 தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் பட்டினிகிடந்து சேத்தால் மட்டும் இவர்கள் என்ன கவலைப்படவா போகிறார்கள்...

 தேர்தலுக்காக ஒவ்வொருவருக்கும் ரூபாய் 2500 தரும் அரசு .....

பள்ளி திறக்கும் வரை தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கு மாதம் பத்தாயிரம் கொடுத்தால் ஒன்றும் குறைந்து போகாது.

 கொடுத்து தான் பாருங்களேன்.

தமிழக முதல்வரின் புகழ் இமயமலை எட்டும்... செய்வீர்களா செய்வீர்களா இல்லையென்றால் மக்கள் செய்து விடுவார்கள்.....