நமது சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டம்
அன்பார்ந்த பள்ளி நிர்வாகிகளுக்கு இனிய இரவு வணக்கம் 🙏🏻நமது சங்கத்தின் அழைப்பின்பேரில் இன்று கிருஷ்ணகிரி DK சாமி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இக்கூட்டத்தில் நமது பள்ளிகளுக்கான பல்வேறு வகையில் பயன்பெறும் நலத்திட்டங்களை பெற்றுத்தந்த மாநில பொதுச் செயலாளர் அவர்களுக்கு அனைத்து பள்ளி தாளாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் பள்ளிகள் திறந்தால் மாணவர்களை எப்படி தக்க வைப்பது வாகனங்களை எப்படி முறையாக வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் இருந்து அனுமதி பெற்று இயக்குவது என்கிற பல கருத்துக்கள் அனைவராலும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இதே போல் ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்திட ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது போன்று இனிவரும் கூட்டங்களில் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு ,
நிர்வாகிகள்.... கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.
குறிப்பு .
வருகின்ற 17 ஆம் தேதி வியாழக்கிழமை நமது கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு குறிப்பாக நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரத்தை மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் வழங்குவதாக நமது மாநில பொதுச் செயலாளர் அவர்கள் தகவல் உறுதி செய்திருக்கிறார் எனவே உங்கள் பள்ளியின் தொடர் அங்கீகாரத்திற்கான கோப்புகளை நீங்கள் கொடுத்திருந்தால் உடனடியாக மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து உறுதி செய்து கொள்ளவும்.
நன்றி!