பொதுத் தேர்வு தேதிகள் எப்போது ? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான வெளியான பின்பே 10,11,12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள அரசூரில் மினி கிளினிக் திறப்பு விழா கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. இதை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். பின்னர் சத்தியமங்கலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து நிரூபர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.