லட்சம் பேர் பங்கு பெறும் மாபெரும் பேரணி.
பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டு விழா பேரணியும் பள்ளிகளை திறக்க கோரியும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் & தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து நடத்தும் லட்சம் பேர் பங்கு பெறும் மாபெரும் பேரணி...
நாள்...06.01.2021 புதன்கிழமை காலை 11 மணிக்கு....
இடம் ...சென்னை அண்ணா சாலை காமராஜர் சிலையில் இருந்து... புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா நினைவிடம் வரை...
தலைமை... கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.
முன்னிலை... சண்முகம் சாமுவேல் மாநில தலைவர். தமிழ்நாடு தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம்.
பேரணியை துவக்கி வைத்தல் பேராசிரியர் ஏ.கனகராஜ் மாநில தலைவர்.
நன்றியுரை .. முனைவர்.
ஆர். நடராஜன் .
மாநில பொருளாளர்.
இப்பேரணியில் தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பிள்ளைகளை
படிக்க வைக்கும் பெற்றோர்கள் அனைவரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் ஓட்டுநர்கள் உதவியாளர்கள்..
அனைவரும் தவறாது தங்கள் பள்ளி வாகனங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து லட்சக்கணக்கில் அழைத்துவர வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற
நம் சங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி அனைத்து பள்ளி நிர்வாகிகள் இன்றே இப்பொழுதே
அனைவரையும் அணிதிரட்ட வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றோம்.
லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த பேரணி தமிழக அரசுக்கு நடத்தும் பாராட்டு விழா மட்டுமல்ல தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை
உடனடியாக நிறைவேற்றிட...
பள்ளி மாணவர்களின்
மன உளைச்சலை போக்க உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும் ...
பள்ளிகள் திறக்க காலம் தாமதமானால் ஆசிரியர்களுக்கும் ஆசிரியரல்லாத பிறஊழியர்களுக்கும் வாழ்வூதிய நிதியாக ரூபாய் பத்தாயிரம் வழங்கிட வேண்டும்.
நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக்கி...
ஆன்லைன் அங்கீகாரம்
நிரந்தர அங்கீகாரம்
தனியார் பள்ளிகளுக்கான தனி இயக்குநரகம் உள்ளிட்ட.. கோரிக்கைகளை நிறைவேற்றும் வெற்றி விழா பேரணியாக அமைந்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்.
என்றும் தனியார் பள்ளிகளின் நலம் நாடும் உங்கள்
கே.ஆர். நந்த குமார்.