நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற அரசாணை

 நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற அரசாணை



தமிழகத்தில் உள்ள நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற அரசாணை: ந. க. எண் 172517 /ஜி3/ 1993 . 

நாள் 14.03.1993. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் சென்னை-6 தமிழ்நாடு பள்ளிக் கல்வி முதன்மை செயலர் அரசாணை எண். 752 நாள். 02.09.1994. மேற்கண்ட அரசாணைப்படி அனைவருக்கும் உடனடியாக நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று நமது மாநில சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கு எண்.. 11465/2019. 

ஏற்கனவே நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாணை இருந்தும் நிரந்தர அங்கீகாரம் தர மறுக்கும் தவறான முன்னுதாரணத்தை கைவிட்டு அனைவருக்கும் உடனடியாக நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் .



அதன் மூலம் லஞ்ச லாவண்யம் குறைக்கலாம். காலநேரம் மன உலைச்சல் வீன் பணச் செலவு குறைத்து அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்தலாம்.

 அரசு அதிகாரிகளுக்கும் தேவையற்ற அலைச்சலும் அவப்பெயரும் இல்லாமல் கல்வி சிறந்த தமிழ்நாட்டை உருவாக்கலாம்.

 2021ல் நமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நிரந்தர அங்கீகாரத்தை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் பெற்றுத்தரும் என்கிற உறுதியை வழங்குகிறோம் .

கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்