மாவட்ட சங்கங்களால் ஒன்றும் செய்ய முடியாது மாநில சங்கம்தான் எதையும் சாதிக்கும்

மாவட்ட சங்கங்களால் ஒன்றும் செய்ய முடியாது மாநில சங்கம்தான் எதையும் சாதிக்கும்

பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய  வணக்கம் .

நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.

 இது ஒரு முக்கியமான செய்தி கவனமுடன் பரிசீலித்து நல்ல முடிவு எடுங்கள். இல்லை என்றால் நீங்கள் லட்சக்கணக்கில் பணம் இழக்க வேண்டி வரும்...

 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் என்றைக்கும் தனியார் பள்ளிகள் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தும் வேறு எதற்காகவும் கலங்க மாட்டோம். அஞ்ச மாட்டோம்.

 அரசு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்காடித்தான் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு உரிமைகளை மீட்டு எடுத்திருக்கிறோம்.

 அந்த வகையில் தனியார் பள்ளிகள் மட்டும் சொத்து வரி பிரபர்டி டேக்ஸ் பல லட்சக்கணக்கில் 

கட்ட வேண்டும் என்று வற்புறுத்தி டிமேண்ட் நோட்டிஸ் கொடுத்து பள்ளிகளுக்கு சீல் வைப்போம் ஜப்தி செய்வோம் என்று மிரட்டி வருகிறார்கள்...

 அறக்கட்டளை மூலம் நடைபெறுகிற கல்வி ஸ்தாபனங்களுக்கு சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று விதி இருக்கிறது.

 அதை வைத்துத்தான் நாம் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சொத்து வரி கட்டாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று இதுவரை பாதுகாப்போம்.

 சட்டத்தை ஆட்சியாளர்கள் பல வழிகளில் பலமுறை மாற்றி மாற்றி போட்டு வருவதால் நம்மிடையே சிலர் தனியாக நீதிமன்றம் சென்று சரியாகப் வழக்கை நடத்தாததால் தடை உத்தரவு நீக்கப்பட்டு தற்பொழுது டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம் .

100% அந்த வழக்கில் நாம் வெற்றி பெறுவோம் 

அதற்கு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் உங்களுக்கு நகராட்சி மாநகராட்சி கிராம ஊராட்சி பேரூராட்சியில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் மற்றும் நீதிமன்ற செலவு கட்டணத்தையும் அனுப்பிட வேண்டும்.

முதலில் நீங்கள் நமது சங்க உறுப்பினராக வேண்டும். அவர்களுக்கு மட்டும்தான் இந்த சலுகைகள் பெற்றுத் தரமுடியும்.

 நமது நீதிமன்ற ஆணையை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தால் செல்லாது அதேபோல் அங்கீகாரம் பெற்று பத்து ஆண்டுகளான அனைத்து வகை நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் எனும் அரசாணையை அமல்படுத்த கோரியும் 

தனியாக வழக்கு போட்டுள்ளோம்.

 அரசாங்கப் பள்ளிகளை தரம் உயர்த்துவது போல் தகுதி வாய்ந்த நர்சரி பிரைமரிபள்ளிகளளையும் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும்.

 என்று தனியாக ஒரு வழக்கும் போட்டுள்ளோம்.

 அதிலும் சம்பந்தப்பட்ட நர்சரி பிரைமரி பள்ளிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டால் மட்டும் தான் அவர்களுக்கு மட்டும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த நீதிமன்றம் உத்தரவிட்ட பள்ளிகள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 கொரோனா நோய் பரவலைத் தடுக்க அரசு தனியார் பள்ளி வாகனங்களை நிறுத்திவிட்டு 10 மாதங்களாக சாலைகளில் ஓடாத வாகனங்களுக்கு சாலை வரி இருக்கை வரி இன்சூரன்ஸ் கட்ட வேண்டும். எப்.சி செய்ய வேண்டும் என்று சொல்வதை கைவிட்டு ஓராண்டுக்கு விதிவிலக்கு வழங்கிட கோரும் கோரிக்கை நீதிமன்றத்திலும் நிச்சயம் வெற்றி பெற்று உங்களுக்கு உரிய உதவிகள் செய்திடுவோம்.

 எனவே சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் இனியும் ஏமாந்து இருந்து விடாமல் நமது மாநில சங்கத்தில் உறுப்பினராகி நீதிமன்ற கட்டணம் செலுத்தி சொத்துவரி நிரந்தரமாக கட்டாமல் பள்ளி வாகன வரிகள் கட்ட  ஓராண்டுக்கு விதிவிலக்கு வழங்கிட கோறும் கோரிக்கை 100 சதவீதம் நிச்சயம் வெற்றி பெற்று உங்களுக்கு உரிய உதவிகள் செய்திடுவோம்.

 எனவே சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் இனியும் ஏமாந்து இருந்து விடாமல் நமது மாநில சங்கத்தில் உறுப்பினராகி நீதிமன்ற கட்டணம் செலுத்தி உங்கள் உரிமைகளை பெற்றுக் கொள்ளலாம் .

ஆர்.டி.இ. கல்வி கட்டணம் வழக்கை கூட நமது மாநில சங்கம் நீதிமன்றத்தில் வழக்காடித்தான் இரண்டு ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தையும் நிலுவையில் இருந்த 40% கல்விக் கட்டணத்தையும் பெற்றுத் தந்தோம்... என்பதை நன்றி உள்ள நல்ல பள்ளி நிர்வாகிகள் மறக்க மாட்டார்கள்....

மாவட்டங்களுக்கு 5 பேர் பத்து பேர் தனிசங்கமாக சேர்ந்து எதையும் செய்துவிட முடியாது என்பதை கடந்த கால வரலாறுகள் நிரூபித்துள்ளது.

 எனவே இனியும் அவர்களை நம்பி ஏமாந்து போக வேண்டாம் .இந்த மாநில சங்கத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் தொடர்ந்து எங்களோடு பயணிக்கலாம்.

 நம்பிக்கை இல்லாதவர்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர விரும்பாதவர்கள் பொய் பிரச்சாரம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த சங்கத்திலிருந்து மட்டுமல்ல வாட்ஸ்அப் குழுவில் இருந்தும் தைரியமாக விலகிக் கொள்ளுங்கள்...

 நல்லவர்கள் மட்டும் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் எங்களோடு பின் தொடர்ந்தால் அவர்களுக்கு மட்டும் இந்த மாபெரும் சங்கம் தொடர்ந்து பணியாற்றும்.

 மேற்சொன்ன எல் நல்ல விஷயங்களையும் எல்லா கோரிக்கைகளையும் 100% வெற்றி பெறச் செய்வோம்.

 இல்லை என்றால் நீங்கள் கட்டியுள்ள பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்... என்ற உத்தரவாதத்துடன் ஒன்றிணைந்து நாம் அனைவரும் உயர்ந்து ஒளிவீசிட...    இன்றே இப்பொழுதே தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தில்

உறுப்பினராகி ஆண்டு சந்தா மற்றும் வழக்கு நிதியை அனுப்பி உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்..

 இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்  எந்த சங்கமாக இருந்தாலும்  

சந்தா கட்ட வேண்டும்.

நமது அடிப்படை உரிமை. 

இலவசங்கள் எப்பொழுதும் இனிக்காது. 

நாம் எல்லோரும் கற்றவர்கள் ஒன்றுபட்டு நின்றால் தான் வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்து.... இன்று உங்கள் பள்ளிகளை நமது மாநில சங்கத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.. 

எல்லாம் பின்னால் பார்க்கலாம் என்று எண்ணிவிட்டால் நாம் வாழ்வில் பின்னால் போய்க்கொண்டே இருப்போம்... என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

 நாம் காலடி எடுத்து வைத்தால் தான் நடக்க முடியும். வாகனங்களுக்கு டீசல் பெட்ரோல் காற்றும் இருந்தால் தான் அடுத்த இடத்திற்கு செல்ல முடியும் ....

சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டும்தான் சரித்திரம் படைக்கமுடியும்.

 இந்த மாநில சங்கத்தில் சேர்வதும் சேராததும்.. முடிவு உங்கள் கையில்...

 நான் பெரிய பள்ளி இதுவெல்லாம் எனக்கு தேவை இல்லை என்பவர்கள் லட்சக்கணக்கில் அரசுக்கு கட்டுங்கள் உங்கள் பணம் உங்களுக்கு நஷ்டம் சங்கத்திற்கு சந்தா கட்டினால் உங்கள் கஷ்டம் எல்லாம் சங்கத்திற்கு.... 

என்று உங்கள் பாதுகாப்பும்   தனியார் பள்ளி நிர்வாகிகள் நலம் பள்ளிகளின் நலம் நாடும் உங்கள்

கே. ஆர் .நந்தகுமார் 

மாநிலச் செயலாளர்.