நமது சங்கத்தின் பெயரை உரக்கச் சொல்லுங்கள்......

 நமது சங்கத்தின் பெயரை உரக்கச் சொல்லுங்கள்......

நடப்பது எல்லாம் கனவா.... ?  நிஜமா...? எங்களை நாங்களே ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறோம் ஆ..... என்ன ஆச்சரியம் எல்லாம் நிஜமாக தான் நடக்கிறது என்று பள்ளி நிர்வாகிகள் ஆச்சரியப்படும் வகையில் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்துள்ளது


பள்ளி நடைபெறும் நாட்களில் பணத்தை கையில் எடுத்துக்கொண்டு அரசு அலுவலகங்களை பலமுறை தட்டினாலும் நடக்காத பல காரியங்கள் இப்போது உடனுக்குடன் நடந்து முடிந்துள்ளது.

RTE கல்விக்கட்டணம் பெறுவதாக இருந்தாலும் தொடர் அங்கீகாரம் பெறுவதாக இருந்தாலும் எதுவானாலும் அது நமது வாசல் தேடி வந்து வழங்குகிற நடைமுறை சாத்தியப்பட்டது அதற்கு காரணம் நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் மட்டுமே.

இந்த Corana  கால கட்டத்தில் உலகமே ஸ்தம்பித்து கிடந்தது இப்போது தான் எல்லாமே இயல்பு நிலைக்கு திரும்பியது இருந்தாலும் நமது பள்ளிகள் மட்டும் தான் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மட்டும்தான் முடக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்களின் வருங்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போர்க்குரல் எழுப்பி வருவது நமது சங்கம் மட்டுமே.

இந்த இக்கட்டான காலத்தில் நாம் பல்வேறு விஷயங்களை சாதித்து உள்ளோம் .நாம் இந்த சிக்கல்களை  சகித்து எதிர்கொண்டு துடிப்போடு எழுந்து நின்று போராடிக் கொண்டுள்ளோம் என்று சொன்னால் அதற்கு காரணம் நமது ஒற்றுமை மட்டும்தான்.

சங்கத்திற்கு நீங்கள் கொடுத்த பேராதரவு தான் நம்மை பல வகைகளில் சாதனையாளர்களாக மாற்றியுள்ளது இதுவெல்லாம் முடியுமா நடக்குமா என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவர்கள் இன்றைக்கு நமது சாதனைகளை அவர்கள் செய்ததாக சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் இந்த உண்மை உலகத்திற்கு நன்றாக தெரியும்.

நாம் மாநிலம் முழுக்க பலமான கட்டமைப்பை வைத்துள்ளோம் கிராமங்கள் தொடங்கி மாநகரங்கள் வரை நமது சங்கத்தின் பெயரை சொல்வதற்கு பெருமைமிகு தாளாளர்கள் உள்ளார்கள். கட்டமைப்பு இல்லாதவர்கள்தான் கூட்டமைப்பு என்று சொல்லிக்கொண்டு மற்றவர்களின் தோள்களில் சவாரி செய்கிறார்கள். 

இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு Corona காலத்தில் நாம் பட்ட கஷ்டங்களை துளி கூட எண்ணிப் பார்க்காதவர்கள் இன்றைக்கு வந்து நமது சாதனைகளை அவர்கள் சாதனைகள் என்று சொல்லி பள்ளி நிர்வாகிகளைஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் நமது பள்ளி நிர்வாகிகளின் நலனுக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டு இருப்பார்களா....?

இன்றைக்கு எல்லாமே எளிதாக நடக்கிறது இனிதாக நடக்கிறது என்று தெரிந்து கொண்டு அரசுத் துறை அதிகாரிகளிடம் ஆக்ரோஷம் காட்டுகிறார்கள் அடாவடித்தனம் செய்கிறார்கள் மேடையேறி கூசாமல் பொய் பேசுகிறார்கள்.

 உங்களுக்கு என்றைக்கும் துணை நிற்பதுமாநிலத் தலைவர் பேராசிரியர் திரு கனகராஜ் , மாநில பொதுச் செயலாளர் திரு கே ஆர் நந்தகுமார் அவர்களின் தலைமையிலான  நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தான்.

நீங்கள் எந்த அலுவலகத்திற்கு சென்றாலும் நமது சங்கத்தின் பெயரை உரக்கச் சொல்லுங்கள் நடக்காத காரியங்கள்கூட இனிதே நடக்கும்இன்றே  நடக்கும். இப்போதே  நடக்கும்அந்த அளவிற்கு  நமது சங்கம் ஆணிவேராக வளர்ந்துள்ளது.

உலகத்தையே தன் கைக்குள் அடக்கி வைத்திருக்கும் கூகுளில் சென்று தனியார் பள்ளிகள் சங்கம் என்று அடித்தாள் அது நமது சங்கத்தின் பெயரை மட்டும் தான் சொல்லும் நமது சங்க தலைவர்களின் படங்களை மட்டும் தான் காட்டும் வேறு எந்த தலைவருக்கும் இந்த மரியாதை இல்லை. நமது சங்கத்தின் செயல்பாட்டை உலகம் நன்றாக அறிந்து வைத்துள்ளது.

நாம் என்ன செய்கின்றோம் என்ன சொல்கின்றோம் என்பதை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது நமது கோரிக்கை எதுவாகினும் உடனுக்குடன் நிறைவேற்றி தருகின்றது.

நாம் இன்னும் சாதிக்க வேண்டியது நிறையவே இருக்கின்றது பல்வேறு சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சிறு சிறு குறு குழுக்களிடம் மாட்டிக்கொண்டு சுருண்டு போய் விடாதீர்கள்.

நேற்றும் இன்றும் என்றும் நம்பிக்கையுடன் செயல்படும் நம் சங்கத்தின் கரத்தை வலுப்படுத்துவோம் வாருங்கள் வருகின்ற புத்தாண்டு நமக்கு வளமானதாக அமையட்டும்.