தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு...எப்போது....?
தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சுகாதாரத் துறையின் அனுமதி பெற்ற பிறகு ஜனவரியில் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில் தேவையின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக தமிழகம் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த 8 மாதங்களாக பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பள்ளி வாகனங்களின் இன்சூரன்ஸ், சாலை வரி ஆகியவை செலுத்தப்படாமல்.உள்ள வாகனங்கள் உடனடியாக அவற்றை எல்லாம் செலுத்தி பள்ளி வாகனங்கள் சாலையில் செல்லத்தக்க வகையில் புதுப்பிக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதை வைத்து பார்க்கும்போது தமிழகத்தில் ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்படும் அனைத்து வகுப்புகளும் நடத்தப்படும் என்று தெரிகிறது