ஜனவரி பள்ளிகளை திறந்து விடுங்கள் இல்லாவிட்டால் தேர்தலையும், தேர்தல் பணியையும் புறக்கணிப்போம்.

ஜனவரி பள்ளிகளை திறந்து விடுங்கள் இல்லாவிட்டால் தேர்தலையும், தேர்தல் பணியையும் புறக்கணிப்போம்.


கடந்த 8 மாதமாக ஆளும்கட்சியும் சரி, எதிர்கட்சியும் சரி யாரும் கண்டுகொள்ளாத ஒரு பிரிவினர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள். எல்லாவற்றையும் திறந்துவிட்ட அரசு பள்ளியை மூடி வைத்துள்ளது. எப்படியும் சம்பளம் வந்துவிடும் என்ற உத்திரவாதம் உள்ளதால் அரசு பள்ளி ஆசிரியர்கள் கவலைப்பட்டபாட்டார்கள். ஆனால் தனியார்பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் நிலை பற்றி ஏன் யாருமே யோசிக்கவில்லை?

80% சதவீத பள்ளிகளில் சுத்தமாக சம்பளமே போடுவதில்லை. மீதி 20% சதவீதபள்ளியில் ஒரு சில பள்ளிகள் மட்டுமே இவ்வளவு கஷ்டத்திலும் முழு சம்பளம் போடுகிறது. மீதியுள்ள பள்ளிகள் பாதி சம்பளம் அல்லது online கிளாஸ் எடுபவர்களுக்கு மட்டும் பாதி சம்பளம் போடுகின்றது.

ஆசிரியர்கள் நிலை இப்படி என்றால் அங்கே பணிபுரியும் அலுவலக, துப்புரவு, ஓட்டுநர் போன்ற ஊழியர்கள் கதி இன்னும் கொடுமை.


மாணவர்கள் கூட்டம் சேர்ந்தால் கொரோனோ பரவும் என்று கூறும் அரசியல்வாதிகளுக்கு , தங்கள் பிரசார கூட்டத்திற்கு இவ்வளவு கூட்டம் கூடுதே அங்கே பரவாதா என்ற அறிவு இல்லை. இல்லை அங்கே வரும் கூட்டத்திற்கு குடும்பமே கிடையாதா? 


இன்னும் சில நாட்களில் தேர்தல் பணிக்கு வரச்சொல்லி ஆர்டர் போடுவார்கள். அந்த ஆர்டரை ஹை கோர்ட் அளவுக்கு கூட மதிக்க கூடாது. 

தனியார்பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் என லட்ச கணக்கில் உள்ளனர் அவர்களுக்கும் குடும்பம் உள்ளது அவர்களுக்கும் ஒட்டு உள்ளது. எனவே தேர்தலையும், தேர்தல் பணியையும் புறக்கணித்தால் என்ன? 

கெட்ட வார்த்தையின் இரகசியம்

தனியார் பள்ளி ஆசிரியர்களை கெட்ட வார்த்தையில் திட்டிய அரசாங்கம்.

 ஜனவரியில் பள்ளி திறாக்காவிடில் தேர்தல் புறக்கணிப்பு புரட்சி வெடிக்கும்.

எங்களுக்கு வேறு எங்கும் வேலைகள் தெரியாது ஆசிரியர் தொழிலைத்தவிர கையில் பணம் இல்லையே தவிர  கோபம் நிறைய உள்ளது வரும் தேர்தலில் காண்பிக்க😡😠 .

 தனியார் பள்ளி ஆசிரியர்களின் அவல நிலை குறித்து

அதாவது இந்தமாதம் திறந்துவிடுவார்கள் அடுத்த மாதம் திறந்துவிடுவார்கள் என்று எண்னி எண்னி 9 மாதம் கடந்துவிட்டது.

இப்படி கடந்த 9 மாத காலமாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் பிழைப்பு வீணாகிகொண்டே செல்கிறது . இதை ஆளுங்கட்சியான 

 ADMK யும் சரி எதிர்கட்சியான DMK யும் சரி ஆட்சியை கைப்பற்றுவதிலேயே குறிக்கோலாக உள்ளார்களே தவிர தனியார் பள்ளி ஆசிரியர்களின் குடும்பங்கள் பற்றி கவலைப்படுவதில்லை . 

தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இவர்களின் குடும்பங்கள் உயிரோடு இருக்கிண்றார்களா இல்லை இறந்துவிட்டார்களா என்று கண்டுகொள்ளாத ஓர் அரசாங்கம்தான் தமிழ்நாட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 

ஒரு சாதரண திரையரங்கு உரிமையாளர் மற்றும் சினிமா துறை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதித்துவிடகூடாது என்று கவலைபட்டு திரையரங்குகளை திறந்துவிடக்கோரிய அரசு இது போண்று அனைத்து துறைகளுக்கும் தளர்வு அளிக்கபட்டு யாருடைய வாழ்வாதாரமும் பாதித்துவிடக்கூடாது என்று எண்ணிய அரசாங்கம் ஏன் பள்ளி கல்வித்துறையை மட்டும் முடக்கி வைத்துள்ளது ? 

குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை இன்றளவும் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. உலகத்தில் மிக முக்கிய துறையும்மானா ,கல்வி வளர்ச்சியின் ஆரம்பமான பள்ளிகூடங்களை முடக்கி வைத்து இதனைச்சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்களின் குடும்பங்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் அனைவரும் இன்றைக்கு மன உலைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு தூண்டும் வகையில் இந்த அரசாங்கம் செயல்பட்டுகொண்டிருக்கிறது. 

எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஓட்டுரிமை உள்ளது என்பதை இந்த அரசாங்கம் மறந்து விடவேண்டாம். உங்களை போண்று, எங்களுக்கு சம்பளம் கிடையாது அதனால்தான் என்னவோ

 எங்களின் வலி 😭உங்களுக்கு புரியவில்லை . சம்பளமே இல்லாமல் இந்த lockdown- ல் உங்களால் உங்கள் குடும்பத்தை  காப்பாற்ற முடிந்திருக்குமா என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். 

அது எப்படி எங்கள் வலிஉங்களுக்கு புரியும் நீங்கள்தான் லட்ச லட்சமாக  வாங்குகிறீர்களே


 1) முதலமைச்சரின் மாத  சம்பளம் = ரூ 2 லட்சத்தி5 ஆயிரம்.


2) ச.ம.உறுப்பினர்= ரூ 1 லட்சத்தி 5 ஆயிரம்.


3) நா.ம.உறுப்பினர் =ரூ 1லட்சம்       

       

4) அரசு இடைநிலை ஆசிரியரின் சம்பளம் = ரூ48423.


5) அரசு பட்டாதாரி ஆசிரியரின் சம்பளம் = ரூ 66120.


6) அரசு முதுகலை ஆசிரியரின் சம்பளம் = ரூ 66840.

ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களின் சம்பளமோ வெறும்  

ரூ 10000 தான் அதிகபட்சமாக 15000 இதில் தற்போது ஆன்லைனில் வகுப்பு எடுப்பவர்களுக்கு மட்டும்தான் சம்பளம் அதுவும் பாதிச்சம்பளம்தான் ( ரூ 5000 ) எடுக்காதவர்களுக்கு அதுவும் கிடையாது .

 இதில் நாம் பள்ளி நிர்வாகத்தையும் குறைகூறக்கூடாது 

ஏனென்றால் பள்ளி திறந்தால்தான் சம்பளம் போடமுடியும் என்ற அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 ஒருவேளை M.P., M.L.A மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களுக்கு ஒரு மாதகால சம்பளம் போடவில்லையென்றால்  இங்கு ஒரு மாபெரும் 

போரட்ட புரட்சியே வெடித்திருக்கும் ஆனால் நாங்களோ போராடினால் வேலை பறிபோய்விடும் என்ற பயத்தில் வீட்டிலேயே 

முடங்கிப்போய் 

மனக்குமுறலுக்கு ஆளாகி நிற்கின்றோம். ஆகையால் எங்கள் வாழ்க்கைக்கு ஒரு வழி கூறுங்கள் இல்லையேல் எங்களின் பட்டதாரி பட்டங்களை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். 

கொரோனாவை காரணம் காட்டி பொதுத் தேர்வு வேண்டாம் என்று சொன்னீர்கள் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வைத்தீர்கள்

இப்போது கொரோனாவின் இரண்டாவது அலை வருகிறது என்று சொல்லி பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்கையில் உங்களுக்கு மட்டும் பொதுத்தேர்தல் தேவையா....? வேண்டாம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்....?

உங்களுக்கு ஓட்டும் பதவியும் எவ்வளவு முக்கியமோ அதே போன்று எங்களுக்கு கல்வியும் மாணவர்களின் எதிர்காலமும் முக்கியம்.

எங்களின் வாழ்வாதாரம் வீணாகப் போனாலும் பரவாயில்லை மாணவர்களின் எதிர்கால நலன் கருதி விரைவில் பள்ளிகள் யில் ஜனவரி பள்ளிகளை திறந்து விடுங்கள் இல்லாவிட்டால் நாங்கள் தேர்தலை புறக்கணிப்போம் உங்களையும் புறக்கணிப்போம்

இதை அரசாங்க கவனத்திற்கு கொண்டுசெல்ல அனைவருக்கும் அனைத்து ஆசிரியர்களும் பகிருமாறு தங்களை வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்ளும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேரச்சி பெற்றிருக்கும் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்     

  இப்படிக்கு

கண்ணீருடன் உங்களைப் போன்ற தனியார் பள்ளி ஆசிரியர்