கிருஷ்ணகிரி, மற்றும் தர்மபுரி மாவட்ட பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர் புதுப்பித்தல் ஆணை வழங்கிய விழா

 கிருஷ்ணகிரி, மற்றும் தர்மபுரி மாவட்ட பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர்  புதுப்பித்தல் ஆணை வழங்கிய விழா



அன்பார்ந்த பள்ளி நிர்வாகிகளுக்கு இனிய காலை வணக்கம்🙏🏻

 நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று தமிழகம் முழுவதும் கல்வி அமைச்சர் திருமிகு. செங்கோட்டையன் அவர்கள் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கும் புதுப்பித்தல் ஆணை வழங்கி வருகிறார்கள் 



அதனடிப்படையிலே நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 17.12.20 வியாழக்கிழமை அன்று கிருஷ்ணகிரி, மற்றும் தர்மபுரி மாவட்ட பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர் விழாவிலே கலந்து கொண்டு புதுப்பித்தல் ஆணையை வழங்கினார்.விழாவில் மாநில பொதுச் செயலாளர்‌ Dr.KR. நந்தகுமார் அவர்கள் கலந்துகொண்டு நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக  தரம் உயர்த்திட வேண்டும் எனவும், அங்கீகாரம் பெற்று பத்தாண்டுகள் ஆன பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், இரண்டு வருடம் கொடுத்த புதுப்பித்தல் ஆணையை குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார். 

விழாவிற்கான  ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் திரு. D.மகேந்திரன் அவர்களின் தலைமையில் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.