ராணிப்பேட்டை ,வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விழா

ராணிப்பேட்டை ,வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விழா

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இதுவரை யாருமே செய்திராத வகையில் மாண்புமிகு கே .ஏ . செங்கோட்டையன் அவர்கள் பள்ளி கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு பள்ளிகளை தேடி வந்து  நேரடியாக அங்கீகாரம் வழங்கி பள்ளி நிர்வாகிகளின் அலைச்சலையும்,  மன உளைச்சலையும் மிச்சப்படுத்தி சிறப்பான கல்வி சேவை ஆற்றிட வழிவகை செய்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக இதே போன்று நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கும் அமைச்சரின் பொற்கரங்களால் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை நமது சங்கத்தின் சார்பில் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சரின் இல்லத்தில் நேரடியாக கோரிக்கை வைத்தோம்.

 அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினோம் இதன் தொடர்ச்சியாக நமது கோரிக்கையை பரிசீலித்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கும் தொடர் அங்கீகாரத்தை தன்னுடைய பொற்கரங்களால் வழங்கி வருகின்றார்.

இதன் முதல் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வழங்கினார் அதனை தொடர்ந்து திங்கட்கிழமை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு வழங்கினார் வரும் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு வழங்க இருக்கின்ற அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்ட பள்ளி பள்ளிகளுக்கு வழங்க உள்ளார் இந்த நல்ல வாய்ப்பை அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வரவேற்கின்றோம். 

இதே போன்று நமது நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையும் அமைச்சரின் பரிசீலனையில் உள்ளது எனவே நாம் அனைவரும் பலம் வாய்ந்த நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் தலைமையில் ஒன்றிணைவோம்!  வெற்றி பெறுவோம்!!.

என்றும் உங்கள்

கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்