தனியார் பள்ளிகள் சொத்து வரி இ. எஸ். ஐ கட்டாமல் இருக்க....
உச்ச நீதிமன்ற ஆணை வேண்டுமா தமிழக நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ பள்ளிகள் மட்டும் சொத்து வரி கட்ட வேண்டும் என்று கிராம ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அதிகாரிகள் பல லட்சக் கணக்கில் கட்டச் சொல்லி பள்ளி நிர்வாகிகளை மிரட்டி வட்டியும் முதலுமாக வசூலிக்கவும் பள்ளிகளுக்கு
சீல் வைக்கவும் காத்திருக்கிறார்கள்...
தனியார் பள்ளிகளுக்கு கடைசி வாய்ப்பாக நோட்டீஸ் ஒட்ட தொடங்கி விட்டார்கள்..
உங்கள் பழைய சொத்துவரி லட்சக்கணக்கில் கட்டாமல் இத்தனை ஆண்டுகளாக மிச்சப்படுத்தி காத்துவந்த நமது மாநில சங்கம் இப்பொழுதும் உங்களை காப்பதற்கு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உரிய உத்தரவை உங்களுக்கு பெற்று வந்துள்ளோம்...
நமது மாநில சங்க உறுப்பினர்கள் வழக்கு செலவுகளுக்கு பணம் கொடுத்தவர்கள் மட்டும் இந்த சலுகைகளை பெற உடனே தொடர்பு கொள்ளுங்கள்..
அதேபோல் நமது மாநில சங்கம் சொன்னது போல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடி உங்களுக்குரிய
ஆர். டி. இ. கல்வி கட்டண பாக்கியை இரண்டு ஆண்டுகளுக்குரியதை பெற்று தந்து விட்டோம்.
உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்திருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் கொஞ்சம் ஏமாந்தால் அந்த பணத்தை இ.எஸ்.ஐ. நிர்வாகம் உங்களுக்கு சொல்லாமலே உங்கள் பணத்தை இ.எஸ்.ஐ. கட்டு என்று களவாடி விடுவார்கள்.
உங்களை கேட்கவே மாட்டார்கள் பின்னர் ஐயோ பணம் இல்லையே என்று ஏங்காதீர்கள் பணத்தை உடனடியாக ஆசிரியர்களுக்குரிய நிலவைச்சம்பளமோ வாங்கிய கடனுக்கு வட்டியோ
மாதத்தவணையோ கட்டி சரி செய்யவும்.
இல்லை என்றால் உங்கள் வங்கிப் பணம் இ.எஸ்.ஐ. சொத்து வரி கணக்கில் அரசாங்கமே எடுத்துக் கொள்ளும். கவனமாய் இருங்கள்.
தனியார் பள்ளிகளின் நலம் நாடும் உங்கள்.
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.
Cell. 9443964053