நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா......

 நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா......



 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் பாராட்டுக்கள்...

 நமது சங்கம் எடுத்த நிலைப்பாட்டின் படி மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு  தொடர் அங்கீகாரத்தை வழங்க கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கரங்களால் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 



முதன் முதலாக சென்னை திருவள்ளூர் மாவட்டங்களுக்கு  அங்கீகார ஆணை வழங்கும் விழாவில் முன்னாள் கல்வி அமைச்சர்கள் இன்றைய ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் பெஞ்சமின் மாபா பாண்டியராஜன் 



நமது சங்கத்தின் மாநில தலைவர் பேராசிரியர் ஏ. கனகராஜ் மாநில துணை தலைவர் ஜே.பி. விமல் மாவட்ட தலைவர்கள் திருவள்ளூர். ராஜன் மணிவண்ணன் செபஸ்டியன் மாநில கல்வி ஆலோசகர் எவர்வின் புருஷோத்தமன்மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று அமைச்சரை வரவேற்று அனைவருக்கும் தொடர் அங்கீகாரம் கிடைக்க உடனிருந்து ஒத்துழைத்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நமது சங்கத்தின் சார்பில் நன்றி பாராட்டப்பட்ட போது எடுத்த படங்களை பள்ளி நிர்வாகிகளுக்கு அன்போடு சமர்ப்பிக்கின்றோம்....

https://youtu.be/Uc2WbKj_UiY

 தமிழ்நாடு முழுக்க அனைத்து பள்ளி நிர்வாகிகள் வங்கி கணக்கில் ஆர். டி. இ. கல்வி கட்டண பாக்கி வரவு வைக்கப்பட்டுள்ளது..

 சரிபார்த்துக் கொள்ளுங்கள்...

2019-2020ம் கல்வியாண்டிற்கான RTE Reimbursement amount கிடைக்கப் பெற்றவர்கள் தங்கள் பள்ளியின் UDISE Code,  பெயர் மற்றும் வங்கியில் கிடைக்கப்பெற்ற தொகையினை கீழ்கண்ட WhatsApp  எண்ணிற்கு  அனுப்பவும்.  

மேலும் இதுவரை இந்த தொகை கிடைக்கப் பெறாதவர்களும் RTE claim not received என 

UDISE code

account number

IFSCCode

MICR code

மற்றும்

பள்ளியின் பெயரை குறிப்பிட்டு தெளிவாக அனுப்பவும்.

தொகையானது 2019-20 ஆம் ஆண்டிற்கான per child cost  அல்லது கல்வி கட்டண நிர்ணயக் குழு இதில் எது குறைவோ அதன் அடிப்படையிலேயே விடுவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட தொகையில் ஏதேனும் வித்தியாசம் இருப்பினும் உடனடியாக தகவல் தெரிவிக்கவும்.

அனைத்து பள்ளிகளுக்கும் சரியான தொகையை  கிடைக்க பெற்றதை உறுதிசெய்துகொள்ளவும் .

*விபரங்களை அனுப்ப வேண்டிய  

WhatsApp No. 9750982959*

 என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு .....என்பதை மறவாமல் மாநில சங்கத்தின் பால் நன்றி பாராட்டுங்கள்...

 என்றும் அன்புடன் 

உங்கள் K.R. நந்தகுமார்.

மாநில பொதுச்செயலாளர்