2021 ல் தனியார் பள்ளிகளை தலை நிமிர செய்வோம்
பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.. .
2020 ல் மூன்று மாதங்கள் கூட முழுமையாக பள்ளியை நடத்த வில்லை. இந்த கொடிய கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அடைந்த துயருக்கு அளவில்லை.
நம் நிர்வாகிகள் பலர் நம்மை விட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்.
இருந்தாலும் நாம் எல்லோரும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இதுகாறும் இருப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
பள்ளிகள் திறக்காமல் நம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ள இச்சூழலில் உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும்.
பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும்.
பொதுத்தேர்வுகளை நடத்திட வேண்டும்.
அதனால் ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்து இன்று காலை பத்து
முப்பது மணி முதல் மாலை 6 மணி வரை ஹலோ எப்.எம். **************/ரேடியோவில் *****************
உங்கள் பிரச்சனைகளை உங்களுக்காக ....
நான் பேசுகிறேன். கேட்டுப்பாருங்கள்.
நமது கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளின் செவிகளில் விழுந்து வெற்றி பெறும் வரை தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்போம்.
உங்கள் அனைவருக்கும் நாளை பிறக்கப்போகும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கி நீங்கள் என்றும் வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகின்றேன்.
2021 ல் தனியார் பள்ளிகளை தலை நிமிர செய்வோம் என்கிற தாரக மந்திரத்தோடு உணர்வோடும்.. உறுதியோடும்... தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தில்...நாம் அனைத்துபள்ளி நிர்வாகிகளையும் இணைத்து...
இணைந்து... பணியாற்றுவோம் வாரீர் என்று வணங்கி வரவேற்று அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்
என்றும் நீங்கா அன்புடன் உங்கள்
கே. ஆர். நந்தகுமார்
மாநில பொதுச்செயலாளர்.