2021 ஜனவரி 6ஆம் தேதி சென்னை நோக்கி அணிதிரள்வோம்

 2021 ஜனவரி 6ஆம் தேதி சென்னை நோக்கி அணிதிரள்வோம்

பள்ளிகளைதி வேண்டி சென்னையில் நடைபெறும் மாபெரும் மக்கள் பேரணியில் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் ஓட்டுநர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

 இது நமது எதிர்கால வாழ்வின் பிரச்சனை நம்மை காக்க யாரும் வரமாட்டார்கள்.

 நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் 

நமது ஒற்றுமையை உலகிற்கு காட்டவும் இந்த பேரணியை எழுச்சியோடு நடத்துகிறோம்.

எனவே பள்ளி நிர்வாகிகள் இதில் சுணக்கம் காட்டாமல் சங்க பேதம் மறந்து பெரிய பள்ளி சிறிய பள்ளி என்கிற எண்ணமில்லாமல் சாதி மத இன மொழி கட்சி பேதம் மறந்து நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நடத்திட வேண்டும்.

 அதற்காக நாம் ஒரு நாளை செலவழிப்போம்... வாரீர் என்று வணங்கி வரவேற்கிறேன்.

 அதில் நமது கோரிக்கைகள் ஈடேறும் நமது ஒற்றுமை வெளிப்படும் 

அரசு நமக்கு செய்யவேண்டியதை செய்ய வைக்க இந்த கடைசி நிமிட முயற்சிக்கு நீங்கள் அத்தனை பேரும் ஒத்துழைக்க வேண்டும்.

 இப்பொழுது இந்த ஆட்சியில் செய்யவில்லை என்றால் வேறு எந்த ஆட்சியிலும் எப்பொழுதும்  நமது கோரிக்கைகள் நிறைவேறுவது கடினம் என்பதைநாம் உணர வேண்டும்.

 எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கி விட முடியாது. எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் சென்று கொண்டே இருக்க முடியாது .நீதிமன்றம் சொல்வதையும் அரசு செய்வதற்கும் மக்கள் மன்றத்தில் போராட வேண்டி இருக்கிறது.

 எந்த அதிகாரியும் எதையும் கேட்காமல் தமிழக அரசுக்கும் அமைச்சருக்கும் தெரியாமல் செய்துவிடமுடியாது.

 அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் கோடிக்கைகள் இணைந்தால்தான் கோரிக்கைகள் வெற்றி பெறும்.... என்பது உங்களுக்கு தெரியாததல்ல .

நாம் பெற்ற ஆர்.டி.இ.கல்வி கட்டண பாக்கி தொடர்அங்கீகார ஆணையும் நமது சங்கம் தொடுத்த வழக்கும்....

நடத்திய போராட்டமும் அரசின் கவனத்தை ஈர்த்தது அதன் விளைவே இந்தக் கொடிய கொரோனா நோய் தொற்று காலத்தில் கூட நாம் நினைத்ததை நடத்திக் காட்டினோம்.... என்பதை நன்றி உள்ள நல்ல பள்ளி நிர்வாகிகளுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.

 எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் வருகின்ற 06.012021 புதன்கிழமை காலை சரியாக 10 மணிக்கு அனைத்து பள்ளி நிர்வாகிகளும் உங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பிறஊழியர்கள் ஓட்டுநர்கள்  பெற்றோர்களுடன் தவறாமல் சென்னை அண்ணாசாலை பெருந்தலைவர் காமராஜர் சிலையில் தொடங்கி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி 

ஜெ. ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் வரை பேரணியாக சென்று தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து.....

 நமது கோரிக்கையை நிறைவேற்ற நீங்கள் அனைவரும் வரவேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றேன்.

 வருகிற போது மறவாமல் உங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கோரிக்கை அட்டை இருக்கும்படி நீங்களே கீழ்கண்ட கோரிக்கைகளை அட்டைகளில் எழுதி எடுத்துக்கொண்டு வரவேண்டும்.

பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டுகள்

தொடர் அங்கீகாரம் வழங்கிய கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி 

ஆர்.டி.இ. கல்விக்கட்டணம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.

பள்ளிகளைத் திற பாடம் நடத்த அனுமதி.

சாலைகளில் ஓடாத காலங்களுக்கு சாலை வரி 

இருக்கை வரி இன்சூரன்ஸ் .எஃப்.சி கேட்காதே....

அறக்கட்டளை மூலம் நடைபெறும் அனைத்து பள்ளிகளுக்கும் சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

பழைய பள்ளி கட்டிடங்கள் அனைத்திற்கும் டி.டி.சி.பி. கட்டிட அனுமதி கேட்காதே..

அரசுப் பள்ளி மாணவனுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

அரசு பள்ளி ஆசிரியருக்கு வழங்கும் அனைத்து பயிற்சிகளும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

இனயும் பள்ளிகளைத் திறக்காமல் இருந்தால் கொரோனா கால நிவாரண நிதியாக ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கும் வாழ்வாதார நிதியாக மாதம் ரூ10000 வழங்கு.

அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதையே அனைவருக்கும்

 ஒரே மாதிரியான கல்வி கட்டணமாக நிர்ணயம் செய்.

ஆர்.டி.இ. கல்வி கட்டணமும் அரசு நிர்ணயிக்கும் கட்டணமும் அரசு வழங்கும் கல்விக் கட்டணமும் ஒரே மாதிரியாக

 இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி கல்விக்கட்டணம் இருக்கக்கூடாது.

அரசு துவக்கப் பள்ளிகளை தரம் உயர்த்துவது போல்... நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்து.

அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான அனைத்து பள்ளிகளுக்கும் நிரந்தர அங்கீகாரம் வழங்கிட வேண்டும் எனும் அரசாணையை அமல்படுத்து.

மூன்றாண்டு அங்கீகாரத்தை ஐந்தாண்டுகளாக்கு..

ஆன்லைன் முறையில் அங்கீகாரம் வழங்கிட வேண்டும் எனும் அரசாணையை அமல்படுத்து.

தனியார் பள்ளிகளுக்கான தனி இயக்குனரகம் தொடங்கிட போட்டுள்ள அரசாணையை உடனே அமல்படுத்து.

என்ற கோரிக்கை முழக்கங்களை கோரிக்கை அட்டைகளாக 

தயார் செய்து வருகிறவர்கள் அனைவர் கைகளில் கட்டாயம் இடம் பெறச் செய்யவும்.

இது நமது தலையாயக் கோரிக்கை 

இதை அரசு செய்ய வேண்டும்...

 செய்ய வைக்க வேண்டும் அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

 நீங்களே ஒத்துழைக்கவில்லை என்றால் அரசு என்றைக்கும் செய்யாது... என்பதை அறியவும்.

 ஒவ்வொரு பள்ளி நிர்வாகியும் உங்களுக்கு அருகிலுள்ள பள்ளி நிர்வாகிகளை உடனடியாக தகவல் தந்து தயார் செய்து உங்கள் பள்ளி வாகனங்களில் கட்டாயம் பங்கு பெறச் செய்ய வேண்டும்.

 இல்லை என்றால் நாம் பள்ளி நடத்துவதற்கு 

இனி சிரமமாகும் பள்ளிகளை திறக்காமல் 

பாடம் நடத்தாமல் தேர்வு நடத்தாமல் ஆல் பாஸ் என்று.. அரசு சொல்லிவிட்டால்

 ஒரு பைசா கூட உங்களால் வசூலிக்க முடியாது.

 நமது சக்தியை நாம் இப்பொழுது காட்டவில்லை என்றால் நமக்கே தெரியாமல் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து விட்டதாக மாணவர்களின்

இ.எம்.ஐ. எஸ். நம்பரை அரசு அதிகாரிகள் களவாடி நமது மாணவர்களை எந்த சான்றும் இல்லாமல் அரசு பள்ளியில் இன்று சேர்த்துவிட்டார்கள் என்று புலம்பும் பள்ளி நிர்வாகிகளே...

 நாளை நீங்கள் பள்ளி திறக்கும் போதுதான் உங்களுக்கு தெரியும் எவ்வளவு மாணவர்கள் இருக்கிறார்கள் என்று.....

 உங்கள் பள்ளி காலி கட்டிடங்களை நீங்கள் வெறும் செங்கற்களாக பார்க்க வேண்டாம்.

 மாணவர்களின் எதிர்கால படிக்கட்டுகளாக மட்டுமல்ல...

 உங்கள் வாழ்வும் கேள்விக்குறி என்பதை நாம் அனைவரும் 

இந்த தருணத்திலாவது உணர்ந்து ஒன்றுபட வேண்டும்.

 உங்களிடம் ஒரு பைசா பணம் கேட்கவில்லை உங்கள் ஒற்றுமையையும் உங்கள் ஆதரவையும் உங்கள் எதிர்கால வாழ்வுக்காய் கேட்கின்றோம்....

 நமது சங்கம் இதுவரை சொன்னதை செய்திருக்கிறது..  தோல்வியை சந்திக்க வில்லை 

வெற்றி ஒன்றையே உங்களுக்கு நாள்தோறும் காணிக்கையாக்கி வரும் ....தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்திற்கு 

நீங்கள் ஒவ்வொரு வரும் உடனிருந்து  ஒத்துழைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம்...

 நாம் ஏதோ மேடைக்கு அமைச்சர் வருகிற போது மட்டும் வந்து போகிற சங்கமல்ல என்பது உங்களுக்கு தெரியாததல்ல..

 நமது பள்ளி கல்வித்துறை அமைச்சர் நிச்சயம் நமது நியாயமான அரசுக்கு செலவே இல்லாத கோரிக்கைகளை செய்து முடிப்பார் அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

 தமிழகத்தின் தலைசிறந்த முதன்மை சங்கம் என்ற நற்பெயர் எடுத்துள்ள நாம் அதை தக்கவைத்துக் கொள்வதற்கும் 

நமது கோரிக்கைகள் வெற்றி பெறுவதற்கும் தமிழக அரசுக்கு நன்றி பாராட்டுவதற்கு இதுவே சரியான தருணம் .

 தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. தேர்தல் முடிந்து பள்ளிகள் திறந்தாள் பள்ளிகள் இருக்கும் பிள்ளைகள் இருக்க மாட்டார்கள்.

 இனியும் காலம் தாழ்த்த வேண்டாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மணித்துளியையும் பயன்படுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இருக்கக்கூடிய அனைவரும் ஜனவரி ஆறாம் தேதி நமது பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள்ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் ஓட்டுனர்கள் பெற்றோர்கள் என அனைவரையும் சென்னைக்கு அழைத்து வாருங்கள்...

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.

 இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.. என்பதை நிரூபிப்போம்.

நாளை நமதே

 வெற்றி நமக்கே என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

 நன்றியுடன் உங்கள் நலம் நாடும்

 கே .ஆர். நந்தகுமார் 

மாநில பொதுச்செயலாளர் 

பேராசிரியர்.  .ஏ. கனகராஜ். மாநிலத்தலைவர். 

ஆர். நடராஜன். மாநில பொருளாளர்.