2,000 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம்

 *2,000 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம்*

பத்து நாட்களில், 2,000 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 900 பள்ளிகளுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில், 37 மாவட்டங்களிலும், 5,946 சுயநிதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த பள்ளிகளுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, தொடக்க கல்வி இயக்குனரகம் வழியே தொடர் அங்கீகாரம் வழங்கப்படும். அந்த வகையில், 2,900 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.

முதற்கட்டமாக, இம்மாதம், 11ம் தேதி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, 120 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் பணி துவங்கியது. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேரடியாக பள்ளி நிர்வாகிகளிடம் அங்கீகார ஆணை வழங்கியுள்ளார். இதுவரை, 10 நாட்களில், 2,000 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. 

மீதமுள்ள, 900 பள்ளிகளுக்கும் வரும் நாட்களில், அங்கீகார உத்தரவு வழங்கப்படும். நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர்

 கே.ஆர். நந்த குமார் அவர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று மூன்றாண்டு அங்கீகாரத்தை ஐந்தாண்டுகளாக வழங்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  கே .ஏ. செங்கோட்டையன் அவர்கள் உறுதி அளித்துள்ளார்... அதை செய்து காட்டுவோம்.