15.12.2020 ஆம்தேதி செவ்வாய்க்கிழமை
கிருஷ்ணகிரி மாவட்ட சங்க கூட்டம்
நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் கே ஆர் நந்தகுமார் அவர்களின் பெரும் முயற்சியால் நமது பள்ளி வாகனங்களுக்கான சாலை வரி, மற்றும் எப்சி(FC) போன்றவற்றிற்கான சலுகைகள் கிடைத்தது.
மேலும் நமது சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் RTE கல்விக் கட்டணம் (இரண்டுமுறை) இரண்டு ஆண்டுகளுக்கான கட்டணம் முழுவதுமாக கிடைத்தது .பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் நமக்கான கட்டணம் கிடைத்தது நமக்கு பெரும் உதவிகரமாக இருக்கின்றது.
தற்பொழுது நமது சங்கத்தின் சார்பில் கல்வி அமைச்சர் திருமிகு. செங்கோட்டையன் அவர்களை சந்தித்து நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கும் கல்வி *அமைச்சர் கரங்களிலே தொடர் அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி தமிழகம் முழுவதும் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர் அவர்கள் தொடர் அங்கீகாரம் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இதற்கெல்லாம் காரணம் நமக்காக நம் பள்ளிகளின் நலன் சார்ந்து சிந்திக்கும் ஒரே பொதுச்செயலாளர் நமது டாக்டர் நந்தகுமார் அவர்கள். அதை நாம் எப்பொழுதும் மறந்து விடக்கூடாது. இப்பொழுது
நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திட நீதிமன்றத்தில் வழக்கு நமது சங்கத்தின் மூலமாக தொடரப்பட்டு இருக்கிறது அதிலும் வெற்றி வாகை சூடுவோம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இதே சமயம் நமது பொதுச் செயலாளர் அவர்களின் வேண்டுகோளாக பல மாதங்களாக பதிவிட்டு வரும் நமது சங்கத்திற்கான சந்தா வினை செலுத்துவது நமது முதற் கடமை.
நமது சங்கத்தின் சார்பாக வழக்கிடும் ஒவ்வொரு வழக்கிற்கும் வழக்கு தொகையாக எவ்வளவோ செலவு செய்து வருகிறார்கள்.இந்த சூழ்நிலையில் நாம் நமக்கான உரிமையை நிலைநாட்டும் நமது மாவட்ட சங்கத்திற்கான சந்தாவை உடனடியாக நீங்கள் அனைவரும் செலுத்த வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
சந்தா செலுத்துவது, மற்றும் பள்ளிகளைத் திறந்தால் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்காகவும், கல்வித்துறைக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்தும் கலந்துரையாட சங்க கூட்டம் வருகின்ற 15.12.2020ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை சரியாக 10.30 மணி முதல் 12.00 மணி வரை நமது சங்கப் பொருளாளர் திரு.சேவியர் அவர்களின் * DKசாமி மெட்ரிக் பள்ளியில்(கார்னேசன்திடல்) கிருஷ்ணகிரி நடைபெற உள்ளது.எனவே அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொண்டு உங்கள் பள்ளியின் சந்தா தொகையை செலுத்தி இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களுடைய ஆலோசனைகளை வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டால் மட்டுமே நமது சங்க நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றிகரமானதாக அமையும் . ஒற்றுமையே பலம் நாம் அனைவரும் ஒன்று பட்டால் அனைவருக்கும் உண்டு வாழ்வு என்பதனை மறந்துவிட வேண்டாம். உங்கள் பள்ளியின் சந்தாவும் உங்கள் வருகையும் மிகவும் அவசியம். மேலும் மாநில துணைத் தலைவர் டாக்டர். சீனி. திருமால் முருகன் அவர்களின் வழிகாட்டுதலோடு அனைவரையும் அன்புடன் எதிர்நோக்கும்......
P.S.கணேசன் . தலைவர்
D.மகேந்திரன் மாவட்ட செயலாளர்
T.M.கிருஷ்ணன் ,மாவட்ட துணைத் தலைவர்
K.H.சேவியர் ,மாவட்ட பொருளாளர்
V.அன்பு , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
T.R.ஸ்ரீதரன் கிருஷ்ணகிரி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்,
E.ஜேக்கப் ஜார்ஜ் பர்கூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்
V.மோகன் காவேரிப்பட்டிணம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்.