நா்சாி பிரைமாி பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக்க வேண்டி முதன்மைக் கல்வி அலுவலாிடம் கோாிக்கை மனு
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு உடனடியாக தொடர் அங்கீகாரத்தை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களே வழங்கிட வேண்டும் என்றும்
நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக்க வேண்டுமென்றும் அங்கீகாரம் பெற்று 10ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் உடனடியாக ஆர்,,டி.இ. கல்வி கட்டண பாக்கியை தரக் கோரியும் மாநிலம் முழுக்க நமது சங்க தலைவர்கள் முதன்மை கல்வி அலுவலர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய போது எடுத்த படம் பள்ளி நிர்வாகிகளின் பார்வைக்கு மகிழ்ச்சியோடு சமர்ப்பிக்கின்றோம்.
உயிர்ப்போடும் துடிப்போடும் உரிமைக்கு குரல் கொடுத்த உன்னதமான சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் பேராசிரியர் ஏ. கனகராஜ் அவர்களும் மாநில பொருளாளர் முனைவர். ஆர். நடராஜன் அவர்களும் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கே ஆர் நந்தகுமார் அவர்கள் அனை வருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் .