பள்ளி, கல்லூாிகள் திறக்க வேண்டாம் என்று சொல்பவா்கள் இதையும் கொஞ்சம் உறுதிபடுத்துங்கள்....
பள்ளி , கல்லூரி திறக்க எதிர்க்கும் நண்பர்கள் , மாணவ மாணவிகள் அனைவரும் கொரானாவுக்கு பயந்து தற்காப்பு செய்ய , வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வார்களா? கடை வீதியிலும் ஷாப்பிங் மால்களிலும் , வெளி உலகின் எங்கும் இவர்கள் பயணிக்க வில்லை என உறுதி செய்வார்களா?
பள்ளி கல்லூரி செல்லாமல் கல்வி கட் டணம் செலுத்தாமல் , தேர்ச்சிமட்டும் வேண்டும் என நினைக்கிறார்களா?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும் குடும்பம் உண்டு அவர்களின் நலனுக்கு யார் கவலை பட்டீர்கள் ஏழு மாதமாக மத சம்பளம் இல்லாமல் , அரைகுறை வருமானத்தில் வாடிக்கொண்டிருக்கும் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் குடும்பங்கள் பற்றி கவலைகொள்ளாத சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கிருந்து வந்தீர்கள். பேருந்துகள் , ரயில்கள், டாஸ்மாக் பார்கள், கடை வீதி ,சினிமா திரை அரங்கு, அரசியல் கூட்டங்கள் இங்கெல்லாம் கொரோன பரவாது .பள்ளி கல்லூரிகளில் மட்டும் பரவுமா ?
. அருமை சமூக ஆர்வலர்கள் கவணியுங்கள் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும்….. அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் போல மாத சம்பளம் கிடைக்க வழி செய்துவிட்டு பள்ளி கல்லூரி திறக்க வேண்டாம் என போராடுங்களேன் நாங்களும் உங்களோடு கூப்பாடு போட வருகிறோம்.
இப்படிக்கு
வறுமையில் வாடி கொண்டிருக்கும் தனியார் பள்ளி ,கல்லூரி ஆசிரியர் குடும்பங்கள்