வேலூா் மாவட்ட பள்ளி நிா்வாகிகள் கூட்டம்

வேலூா் மாவட்ட பள்ளி நிா்வாகிகள் கூட்டம்


அன்புள்ள வேலூர் மாவட்ட அனைத்து தனியார் பள்ளிகள் தாளாளர்  நண்பர்களுக்கு வணக்கம். 22.11.2020 ஞாயிற்றுக் கிழமை  பிற்பகல் சரியாக 2.30 மணிக்கு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சாந்தி நிகேதன்  மெட்ரிக் பள்ளியில், மாநில அமைப்புச் செயலாளர் திரு கே.தெய்வசிகாமணி அவர்கள் தலைமையில்  நடை பெறும் நம் சங்க அவசர கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள அனைவரையும் இரு கரம் கொண்டு வணங்கி கேட்டுக் கொள்கிறேன். 


நம் மீது திணிக்கப்படும் தரை வாடகை,நர்சரி பள்ளிகள் 8 ஆம் வகுப்பு வரை உயர்த்த கோரிக்கை ESI கட்டணம்,நிருத்தி வைத்துள்ள வாகனங்கள் பள்ளிகள் திறந்தால் கட்டவேண்டிய அபரிமீத கட்டணம்,இதுவரை தொடர் அங்கீகாரம் பெற முடியாத நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் சிக்கல்கள் கலைவது, டி.சி இன்றி நம் பள்ளி மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்தமை,2019-20 ஆம் ஆண்டு RTE பணம் அரசாங்கத்திடம் பெறுதல் ,தாலுக்கா வாரியாக நிர்வாகிகள் தேர்வு செய்தல்,மாவட்டம்  அளவில் சில பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்தல் போன்றவற்றைப் பற்றி தீர்மானிக்க,நாம் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுவோம்.


இக்கூட்டத்தில் அணைக்கட்டு,கணியம்பாடி, வேலூர் மற்றும் காட்பாடி ஆகிய நான்கு  ஒன்றிய பள்ளிகளின்  தாளாளர் நண்பர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன். 


இப்படிக்கு 
கே.துரைகோபால் ,9943216599
தலைவர், தமிழ் நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிக், மே.நிலை,சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம். வேலூர் மாவட்டம்