சங்கத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் நீக்கம்.....

சங்கத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் நீக்கம்.....


 மரியாதைக்குரிய சங்கத் தலைவர்கள் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.


 நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.


 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்ததை கடந்த 30 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து இன்றைக்கு உயர்ந்து ஒளிர்ந்து நிற்கின்றோம்.


 இந்நிலையில் சங்கத்தை வலுவாக்க நம்மிடையே எவ்வளவோ சமரசங்களை செய்து கொண்டோம் ..


நமது ஒவ்வொரு அசைவும் தனியார் பள்ளிகளில் நலம் சங்கத்தின் ஒற்றுமை அதை மையப்படுத்தி எத்தனையோ எதிர்ப்புகளை சமாளித்து பல வெற்றிகளை கண்டு இருக்கிறோம்.


 நமது சங்கத்தின் வெற்றி எல்லாம் ....அரசு தனியார் பள்ளிகளை நசுக்கப்போடும் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து அச்சமின்றி குரல் கொடுத்து நீதிமன்றம் சென்று வெற்றி பெற வேண்டிய விஷயங்களில் வெற்றி பெற்று,போராட வேண்டிய இடங்களில் போராடி வெற்றி பெறுகிறோம். 


ஒரு சில பள்ளிகளாக தொடங்கிய தனியார் பள்ளிகள் இன்றைக்கு 20,000 பள்ளிகளாக உயர்ந்து அரசின் பெரும் பணச் சுமையை பணிச் சுமையை குறைத்து லட்சக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பைத் தந்து கோடிக்கணக்கான மாணவர்களுக்கு
தரமான கல்வி தரும் அற்புதமான அமைப்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளளோடு இயங்கிவரும் நல்ல சங்கம் நாம் என்பதை நாடறியும் இந்த நிலையில்....


 நமக்குள்ளே சதிகள்செய்யும் கருப்பு ஆடுகளாக இன்றைக்கு சிலர் வலம் வருவதை கடந்த ஆறு மாதங்களாக கண்காணித்து.....


 இந்த கொடிய கோரானா நோய் தொற்று காலத்திலும் ஓய்வின்றி உழைத்து சங்கத்திற்கு வலுவூட்டி தனியார் பள்ளிகளின் நலனை பாதுகாத்து ஒரு பைசா லஞ்சம்
இல்லாமல்   கல்வியமைச்சர் கையால் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்து 
ஆர். டி .இ .கல்வி கட்டணத்தை பெற்றுத்தந்து, ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது , கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றெல்லாம் அரசு போட்ட ஆணைக்கு எதிராக நீதிமன்றம் சென்று வழக்காடி வெற்றி பெற்று இன்றைக்கும் பள்ளிகளை பாதுகாத்து வருகின்றோம்.


 இந்நிலையில் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. ஜி.ஆர் .ஸ்ரீதர் திருச்சி மாவட்ட தலைவர் நிர்மலா சந்திரசேகர், வேணு குமார் பெரம்பலூர் குணசேகரன், மாணிக்கம் கும்பகோணம் பாஸ்கர் ஆகியோர் சங்கத்தை உடைக்க திரு.பாட்ஷா உடன் இணைந்து பல்வேறு சதிகள் செய்து வந்ததை தனியார் பள்ளி நிர்வாகிகள் நன்கறிவார்கள்.


 கடந்த பல ஆண்டுகளாக  வாங்கிய சந்தா பணத்தை மாநிலச் சங்கத்திற்கு வரவு-செலவு ஒப்படைக்காமல்  சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு எதிராகவும் புதிதாக ஒரு சங்கத்தை உருவாக்கி விட்டு நமது சங்கத்திற்கு கெட்டபெயர் உருவாக்கும் எண்ணத்தோடு செயல்பட்டு பத்திரிகைகளில் பேட்டி தந்து இனி என்னாலும் இந்த சங்கத்திற்கு ஒத்து வர மாட்டார்கள் என்பதால்


மாநில மாவட்ட நிர்வாகிகளின் கருத்துக்களின் அடிப்படையில் எல்லோரும் மேற்கண்ட நபர்கள் நமது மாநிலச் சங்கத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டே வருவதால் அவர்களை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் இன்று முதல் நீக்கம் படுகிறார்கள்..


 அவர்களோடு நமது சங்க தலைவர்கள் பள்ளி நிர்வாகிகள் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது. அவர் நடத்தும் கூட்டங்களுக்கு செல்லக் கூடாது.


 அது நமது பள்ளி நிர்வாகிகள் ஒற்றுமையை சீர்குலைக்கும்.


 எனவே நமது சங்கத்தின் ஒற்றுமையை உயர்த்தி உழைப்பை பெருக்கி அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் நமது மாநில சங்கத்தில் இணைத்து தனியார் பள்ளிகள் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை அயராது உழைப்போம் வாரீர் என்று வணங்கி வரவேற்கிறோம். 


மாநில தலைவர் மாநில பொருளாளர் மாநில துணை தலைவர்கள் மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் அனைவரின் வேண்டுகோளை ஏற்று மேற்கண்ட சங்க விரோதிகளை நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தில் இருந்து இன்று முதல் நிரந்தரமாக நீக்கி உள்ளோம் என்பதை பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கிறோம் .....


தங்கள் உண்மையுள்ள 
டாக்டா், கே. ஆர். நந்தகுமார். மாநில பொதுச் செயலாளர்


பேராசிரியர்.ஏ. கனகராஜ்  மாநில தலைவர். 


முனைவர். ஆர்.நடராஜன். மாநிலப் பொருளாளர்