பள்ளிகளைத் திறக்க கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு.....
அனுப்புதல் ...
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.
கதவு எண் .6. ஏகாம்பரம் தெரு. பம்மல்.. சென்னை .75. கைப்பேசி எண்..
94439 64053
Email ID matriculationnews2011@gmail.com
பெறுதல்....
மாண்புமிகு .தமிழக முதல்வர் அவர்கள்
தமிழக அரசு தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டை.
சென்னை. 9 .
வழி....
மாண்புமிகு பள்ளிக்கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்கள்.....
பொருள்... பள்ளிகளை திறக்க வேண்டி வேண்டுதல் விண்ணப்பம்....
ஐயா... வணக்கம் தமிழகத்தில் தங்களின் சீரிய தலைமையில் நல்லாட்சி நடைபெறுவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
இந்த கொடிய கொரோனா நோய் தொற்று காலத்திலும் மிகச் சிறப்பாக பணியாற்றி மக்களை பாதுகாத்து எங்கள் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி தந்த நல்ல அரசை நன்றியோடு பாராட்டுகின்றோம்.
இந்தச் தீ நுன்னி சூழ்நிலையில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கவில்லை முழுமையான அளவுக்கு பாடம் நடத்த இயலவில்லை.. பள்ளிகள் திறந்து சரிவர பாடம் நடத்ததால்...கல்வி கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு இட்டும் பெற்றோர்கள் இன்னும் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு ஒரு பைசா கூட பணம் கட்டவில்லை..
மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 80 சதவீதம் பேர் கல்வி கட்டணம் செலுத்தவில்லை. ஆசிரியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் வாழ்விழந்து நிற்க்கிறார்கள். தனியார் பள்ளி ஆசிரியர்கள் கிராமங்களில் தினக்கூலி வேலைகளுக்கு சென்று கொண்டிருக் கிறார்கள்.
ஏழை கிராமப்புற மாணவர்கள் படிக்க முடியாமல் இணையதள வசதி இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளிலும் படிக்க முடியாமல் தமிழக அரசின் கல்வி தொலைக் காட்சிகளில் கூட சரிவர படிக்க முடியாமல் பார்க்க முடியாமல் படிப்பை மறக்க தொடங்கிவிட்டார்கள்.
தனியார் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வாங்காமல் பழைய புதிய கல்வி கட்டணத்தை கட்டாமல் 15 லட்சம் பேர் அரசு பள்ளியில் சேர்ந்து விட்டதாக நாள்தோறும் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது தனியார் பள்ளி ஆசிரியர்கள்
பலரும் குடும்பம் குடும்பமாய் வறுமைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்
கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் கல்வி கட்டமைப்பை சிறழித்துவிட்டாள் மிக சீக்கிரம் அந்நாடு அனைத்திலும் சீரழிந்து போகும் என்பது கடந்த கால வரலாறு....
இந்நிலையில் தங்கள் பொற்கால ஆட்சியில் அந்த தவறுகள் நடந்து விடக்கூடாது கிராமம் முதல் நகரம் வரை உள்ள அனைவருக்கும் தரமான கல்வியை கிடைக்கச் செய்வதில் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு அளப்பரியது
என்பது தாங்கள் அறியாததல்ல.
மத்திய மாநில அரசுகளின் பெரும் பொருட்செலவையும் பணிச்சுமயையும் குறைத்து வேலைவாய்ப்பை பெருக்கி அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது
தனியார் பள்ளிகள் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந் நிலையில் பல மாநிலங்களில் பல நாடுகளில் பள்ளிகள் திறந்து கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அரசின் அனைத்து விதிகளுக்குட்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படாமல் சமூக இடைவெளியோடு கிருமிநாசினி கொண்டு பள்ளிகளுக்கு தெளித்து அனைவரும் முக கவசத்தோடு முழு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளோடு சமுக இடைவெளிவிட்டு சூழ்நிலைக் கேற்றவாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது காலை மாலையோ படிப்படியாகவோ பள்ளிகளை திறந்து கற்றலையும் கற்பித்தலையும் உறுதி செய்திட வேண்டும்.
இன்னும் 50 சதவீத தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் கிடைக்கவில்லை. வாங்க வழியில்லை இந்த கொடிய நோய் தொற்று காலத்திலாவது இந்த கொரோனா ஆண்டுக்காவது அனைத்து தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவச பாட புத்தகத்தை கொடுத்து படிக்க வைத்தால் அதுவே பெரும் புண்ணியமாகும்.
அந்த நல்ல காரியத்தை தங்களால் மட்டும்தான் செய்திட முடியும் காலாண்டுதேர்வு நடக்கவில்லை. அரையாண்டுதேர்வு முடித்தாக வேண்டும். அடுத்து மூன்று மாதங்களில் முழு ஆண்டுத்தேர்வு வந்துவிடும்.
என்ன செய்யப்போகிறோம் 10 11 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு உண்டா இல்லையா என்று தெரியாமல் பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
மாணவர்களுக்கு நல்ல கல்வி தர முடியவில்லையே என்று ஏக்கத்தோடு மிகுந்த மனவேதனையில் ஆசிரியர் பெருமக்கள் இருக்கிறார்கள். எனவே எல்லாம் திறந்த பின்னரும் எதிர்க்கட்சிகளும் உதிரிக் கட்சிகளும் இன்னபிற சமூக ஆர்வலர்கள் என்கிற பெயரில் யாரோ சொல்வதைக் கேட்டு இனியும் பள்ளிகளை திறக்காமல் காலம் தாழ்த்தினால் அதைவிட பெரிய பாவம் வேறொன்றுமில்லை.
வெயில்காலமும் மழைக் காலமும் விழா காலமும் முடிந்து விட்டது. அடுத்து தேர்வு காலமும் தேர்தல் காலமும் வந்துவிட்டது.
எனவே எதிர்கால மாணவர்களின் பெற்றோர்களின் ஆசிரியர்களின் நலன் கருதி இவர்கள அனைவரையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் வீட்டுக்குள்ளேயே
மனநோயாளிகளாக மாறிக் கொண்டிருக்கிற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உடனே பள்ளிகளை திறப்பது ஒன்று தான் சாலச் சிறந்தது... என்பதை உணர்ந்து பள்ளிகளை திறக்க ஆணையிடுங்கள்.
பள்ளிகளை திறக்க இரண்டு முறை ஆணையிட்டும் ஏற்பட்ட தடைகளை உடைத்தெறிந்து பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள்.
மாண்புமிகு சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் கூட இன்று தமிழகத்தில் இரண்டாவது கொரோனா அலை இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்கள்.
எனவே அருள்கூர்ந்து இனியும் காலம் தாழ்த்தாமல் நல்லதொரு முடிவெடுத்து
பிறக்கப் போகும் புத்தாண்டுக்கு முன்பே பள்ளிகளை திறந்திட வேண்டும்.
தாயும் தந்தையும் வேலைக்குச் செல்கிற போது பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு செல்வது பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் பெண் குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு விட்டு செல்வது பெரும் அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல்
வறுமையில் வாடிக் கொண்டிருக்க கூடிய எங்கள் தனியார் பள்ளி ஆசிரியர் பெருமக்கள் வாழ வழியின்றி வக்கற்று நிற்கிறார்கள்.
அவர்களுக்கு வாழ்வாதார நிதியாக மாதந்தோறும் ரூபாய் பத்தாயிரம் தாருங்கள் அவர்கள் பசிப்பிணி போக்க இது உதவும் .
எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே அனைத்து வகை பள்ளிகளையும் திறந்திட உரிய ஆணையைப் பிறப்பித்திட வேண்டுமேன எங்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு வேண்டுகின்றோம்.
தங்கள் உண்மையுள்ள
கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்
நாள் 30 .11 .2020.
சென்னை .75.