நா்சாி பிரைமாி பள்ளிகளுக்கு அமைச்சா் கரங்களால் அங்கீகாரம் வழங்க வேண்டும். சி.இ.ஓ.விடம் மனு அளிக்கும் நிகழ்ச்சி

நா்சாி பிரைமாி பள்ளிகளுக்கு அமைச்சா் கரங்களால் அங்கீகாரம் வழங்க வேண்டும். சி,இ,ஓ,விடம் மனு அளிக்கும் நிகழ்ச்சி



நமது சங்கத்தின் தொடா் முயற்சியினால் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் நம்மிடம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தமிழகம் முழுக்க உள்ள பெரும்பான்மையான மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தொடா் அங்கீகாரத்தை ஒரு பைசா செலவில்லாமல் வழங்கியருக்கிறாா்,


அதேப்போன்று நா்சாி பிரைமாி பள்ளிகளுக்கும் அமைச்சா் கரங்களால் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற கோாிக்கையை அமைச்சாிடம் வைத்துள்ளோம். அவரும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளாா், எனவே இதை வேகப்படுத்தும் விதமாக அரசின் கவனத்தை  ஈா்ப்பதற்காக 09.11, 2020 திங்கட்கிழமை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலாிடமும் மனு வழங்கும் நிகழ்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்,


இதில் அனைத்து பள்ளி தாளாளா்களும் தவறாமல் கலந்துக்கொண்டு நமது பலத்தை அரசுக்கு தொிவி்க்க வேண்டும், அப்போது தான் இன்னும் மீதமுள்ள நமது கோாிக்கைகள வெல்ல முடியும், 


** தகுதி வாய்ந்த பள்ளிகளுக்கு அரசு தொடக்கப் பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தியது போல் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திட வேண்டும்..... என்ற கோரிக்கை மனுவை  C.E.O.  அவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சியில் அனைத்து நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றோம்.


 மாவட்ட நிர்வாகிகள். இதே மாதிரி எல்லா மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் பெயரைப் போட்டு எல்லா மாவட்டங்களிலும் பேனர் டிசைன் செய்து வாட்ஸ் அப்பில் அனுப்பினால் போதுமானது.


 விரும்பினால் தனியாக சுவரொட்டி தயார் செய்து சிஇஓ அலுவலங்கள் முன்பாக ஒட்டலாம். 


அரசின் கவனம் ஈர்க்க வேண்டும். 


மாநில சங்கத்தின் பேனர் தனித்தனியாக எல்லா மாவட்டங்களிலும் கையில் பிடித்துக் கொண்டு சிஇஓ அலுவலகம் முன்பு நின்று புகைப்படம் எடுத்து எல்லா வாட்ஸ்அப் பேஸ்புக் டுவிட்டரில் பதிவிட வேண்டும் என்று அன்போடு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.


 இந்த செய்தியை அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் அனுப்பலாம்.


 நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகிகள் அல்லது சங்க தலைவர்கள் விரும்பினால் தனித்தனியாகவும் அவர்கள் பள்ளியின் பெயரை போட்டும் சுவரொட்டிகள் பேனர்கள் வெளியிடலாம். 


அதற்கு ஆட்சேபணை கிடையாது இன்னும் 
5 நாட்கள்ட்டுமே உள்ளது. 


மிகச் சிறப்பாக வேலை செய்து கோரிக்கைகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை தயவுசெய்து உருவாக்கித் தாருங்கள்..


 நன்றி வணக்கம்


உங்கள் நந்தகுமார்