என்றும் உங்களுடன்,,,,, ! எப்போதும் உங்களுடன்,,,,,,!!
பொதுச்செயலாளர் பெருந்தகை, டாக்டர் K.R.நந்தகுமார் அவர்களுக்கு........
தமிழகம் முழுவதும் நமது சங்கத்தின் பலம் அனைவரும் அறிந்ததே.உங்களின் அயராத முயற்சியினாலும், உழைப்பாலும் எத்தனையோ பள்ளிகள் மேம்பட்டுள்ளது, பள்ளி நிர்வாகிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக நின்று குரல் கொடுத்து ஆக்கப்பூர்வமான செய ல்களை செய்திருக்கிறீர்கள்.
இதை யாராலும் மறுக்க முடியாது. உங்களை போல் யாராலும் தனியார் பள்ளிகளின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவும், பிரச்சினைகளை தீர்த்திடவும் எவராலும் எவ்வளவு தூரம் இயலும் என்பது கேள்விக்குறியே!? ஆதலால் சங்கத்தில் இருந்து சென்றவர்களை பற்றி கவலைப்படாமல் உங்களையே நம்பி இருக்கும் பள்ளி தாளாளர்கள் மாவட்டம் தோறும் இருக்கின்றார்கள்.
நாங்கள் என்றும் உங்களுடனே தொடர்ந்து உங்கள் வழியில் பின்தொடர்ந்து வருகிறோம். எங்களுக்கு சிறந்த வழியையும், ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் கொடுங்கள்.நமது சங்கத்தை மேலும் வலுப்படுத்துவோம். நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்து இருப்பதை பெருமையாக நினைக்கிறோம்.
உங்களுடன், உங்கள் வழியில், என்றென்றும்...
கிருஷ்ணகிரி மாவட்டம்.