மெட்ரிக்குலேசன் நியூஸ் படிப்பவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.....!
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,.....
மெட்ரிக்குலேசன் நியூஸ் இணையத்தில் தொடங்கப்பட்டு பத்து மாதங்கள் நிறைவுற்ற நிலையில் 18,11,2020 இரவு 10,20 நிலவரப்படி இதுவரை நமது இதழை படித்தவா்களின் எண்ணிக்கை 1,00,103 ஆகும்,
கூகுள் நிறுவனத்தின் நவலேகா உதவியுடன் இந்தியா முழுவதும் 7,000 பதிப்பாளா்கள் இணைந்துள்ளாா்கள், அந்த ஏழாயிரம் போில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம் என்பது மெட்ரிக்குலேசன் நியூஸ்க்கு கிடைத்த பெருமை என்றாலும் அது உங்களுக்கு நம் அனைவருக்கும் சோ்ந்து கிடத்த பெருமை.
இணையத்தில் நமது இதழை படிப்பவா்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாித்திருக்க வேண்டும், ஏன் எனில் நமது சங்கம் அவ்வளவு பலம் பொருந்தியதாக உள்ளது, இருந்தும் குறைவான வாசகா்களையே நாம் பெற்றுள்ளோம்,
அதற்கு காரணம் நாம் அனுப்புகிற இந்த செய்திகளின் லிங்கை பலா் திறந்து கூட பாா்ப்பதில்லை. அதற்கு காரணம் அவா்களுக்கு இணையத்திற்குள் செல்ல தொியவில்லை என்பதா? இல்லை தலைப்பை மட்டும் தொிந்துக்கொண்டால் போதும் என்பதா?
இந்த இதழ் முழுக்க முழுக்க பள்ளி நிா்வாகிகளின் போா்வாளாக நம்து அனைத்து பிரச்சனைகளை எடுத்துரைப்பதோடு மட்டும் நில்லாமல் அரசின் அனைத்து அறிவிப்புகளையும், அரசாணைகளையும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்கி வருகிறது.
அச்சடித்து அனுப்புகிற பத்திாிகைகள் கூட சில நாட்களில் காணாமல் போய்விடும், ஆனால் இந்த இணைய இதழில் நாம் பதிவிட்டுள்ள அனைத்து செய்திகள், கட்டுரைகள், அரசானைகள், நிகழ்சிகள், போராட்டங்கள் என அனைத்தையும் தனித்தனி தலைப்புகள் இட்டு நூற்றுக்கணக்கான பக்கங்களில் பதிவு செய்து வைத்துள்ளோம். இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பாா்க்கலாம்,படிக்கலாம், பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்,
உங்கள் பள்ளியை திறம்பட நடத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம்,
இனி வரும் காலங்களில் இதை இன்னும் மெருகேற்ற உள்ளோம், மெட்ரிக்குலேசன் நியூஸ் ஒவ்வொரு பள்ளி நிா்வாகிகளுக்கும் சொந்தமானது. இதில் எங்களின் கருத்துக்கள் மட்டுமல்ல உங்கள் அனைவாின் கருத்துக்களும், கட்டுரைகளும், உங்கள் பள்ளி நிகழ்சிகள், உங்கள் பள்ளியைப் பற்றிய செய்திகள், உங்கள் பள்ளி மாணவா்களின் சாதனைகள் என அனைத்தையும் இடம் பெறசெய்ய வேண்டுகிறோம்,
நமது ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டிற்கு, சாதனைகளுக்கு பாலமாக இருக்கின்ற இந்த இதழ் மென்மேலும் சிறப்புற உங்களின் மேலான ஆதரவை தொடா்ந்து நல்கிட வேண்டுகின்றேன்,
நம்பிக்கையுடன்
கே. ஆா். நந்தகுமாா், மாநில பொதுச் செயலாளா்
கே.ஆா். இரவிச்சந்திரன், ஆசிாியா், மெட்ரிக்குலேசன் நியூஸ்,