நவம்பா் 9ஆம் தேதி மனு கொடுக்க தயாா் ஆவோம்,,,,,!
சங்கத் தலைவர்கள் பள்ளி நிர்வாகிகளுக்கு அன்பு வேண்டுகோள்...
அனைவருக்கும் இனிய வணக்கம் ..
நான்தான் உங்கள் நந்தகுமார் பேசுகிறேன்.
வருகின்ற திங்கட்கிழமை ஒன்பதாம் தேதி காலை சரியாக பதினோரு மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர் களையும் நமது பள்ளி நிர்வாகிகள் நமது சங்க தலைவர்கள் தலைமையில் அனைவரும் தவறாது நேரில் சென்று உங்கள் சிஇஓ அவர்களிடம் நன்றி பாராட்டி இந்த கோரிக்கை மனுவினை அளித்து கோரிக்கை மனுவில் பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் உங்கள் கையெழுத்துக்களை போட்டு தர வேண்டும்.
கூடுதலாக இந்த கோரிக்கை மனுவை நகலெடுத்து உங்கள் ஊர் பத்திரிக்கைகளில் உங்கள் புகைப்படத்தோடு செய்திகள் வரும் வண்ணம் செய்ய வேண்டும்.
கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் இனி அடுத்து பள்ளி திறக்கும் வரை தனியார் பள்ளி வாகனங்கள் தமிழக சாலைகளில் ஓடாது. ஆனால் ஓடாத காலங்களுக்கு சாலை வரி இருக்கை வரி இன்சூரன்ஸ் கட்ட வேண்டும் என்று போக்குவரத்து துறை நிர்பந்திக்கிறது. அதற்காக போக்குவரத்து அமைச்சர் மற்றும் ஆணையர் அவர்களையும் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து மூன்று ஆண்டுகளுக்கான சுகாதார சான்று வழங்க கோரியும் இன்று காலை 11 மணிக்கு நேரில் சந்திக்கின்றேன்.
சாலை வரியை இன்சுரன்ஸ் இருக்கை வரி f.c. செய்வதில் இந்த ஆண்டு விதிவிலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம்..
இது கமர்சியல்வைக்கில் அல்ல சர்விஸ் வைக்கில் என்பதால் தனி வழக்காக பதிவு செய்யப்பட்டு நீதி அரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களிடம் நீதிக்காக காத்திருக்கின்றோம்.
தீபாவளிக்குள் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி மாணவர்களை சேர்த்த வகையில் வர வேண்டிய கல்வி கட்டண பாக்கியை தர வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் சொல்லியும் காலதாமதம் செய்து வருகிறார்கள்.
நமது சங்கத்தை தவிர மற்ற சங்கங்கள் இது குறித்து வாயே திறக்கவில்லை.
பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு உதவவும் இல்லை. நன்றி பாராட்டவும் இல்லை..நல்ல மனம் இருந்தால் மார்க்கம் உண்டு ..இங்கே நல்ல மனம் கூடவா இல்லாமல் போய்விட்டது.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.... இதை நான் சொல்லவில்லை வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார் ..
வாழ்க எம் பள்ளி நிர்வாகிகள் வளர்க பள்ளி நிர்வாகிகள் ஒற்றுமை
அன்புடன் உங்கள்
நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.