பள்ளிகளை திறக்க தயாா் ஆவோம்,,,,!
கொரோனா காரணமாக கடந்த எட்டு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, பள்ளிகளை மீண்டும் திறப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது,
அக்டோபா் மாதமே 9. 10. 11. 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் துவங்க அரசாணை வெளியிட்டது, இதை இங்குள்ள எதிா் கட்சிகளும் அரசுப்பள்ளி ஆசிாியா்களும் எதிா்த்ததால் அந்த அரசாணை வாபஸ் பெறப்பட்டது, இதனைத் தொடா்ந்து கொரோனா குறைந்து வந்ததால் கடந்த நவம்பா் 16 ஆம் தேதியில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முயற்சித்தது, அதற்கும் தி,மு,க, தலைவா் மு,க,ஸ்டாலினும் அவரது சகாக்களும் எதிா்ப்பு தொிவித்தனா்,
எங்கும் இல்லாத கொரோனா பள்ளிகளில் மட்டும் ஒட்டியிருப்பதாகவும் மாணவா்கள் பள்ளிக்கு வந்தால் பாதிக்கப்படுவாா்கள், படிப்பு முக்கியமா மாணவா்களின் உயிா் முக்கியமா என்ற கேள்வி எழுப்பி தவறான தகவல்களை பரப்பி அரசின் முன் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது,
இந்நிலையில் இதற்கும் மேலாக பள்ளிகளை மூடி வைத்தால் மாணவா்களின் எதிா்காலம் பாழாகி விடும் என்று நினைத்த தமிழக அரசு வரும் 2021 ஜனவாியில் எப்படியேனும் பள்ளிகளை திறக்க வேண்டும் என முடிவெடுத்து அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது,
ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள பாடநூல் கழகத்திலிருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, அதில் தனியா் நா்சாி பிரைமாி மற்றும் மெட்ாிக் பள்ளிகள் தங்கள் பள்ளிகளுக்கு தேவையான மூன்றாம் பருவ பாட புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது,
இதன் மூலம் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளது, எனவே பள்ளி நிா்வாகிகள் இதற்கு மேலும் சோம்பேறித்தனமாக இல்லலாமல் தங்களுக்குள் உள்ள அச்சத்தை தூக்கி எறிந்து விடடு பள்ளிகளை திறப்பதற்கு ஏதுவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுகின்றோம்,
இன்று முதலே இதற்கான பணியை துவக்கினால் தான் ஜனவாி முதல் வாரத்தில் நமது பணிகளை செவ்வணே செய்ய முடியும்,
இனியும் தயங்காதீா்கள் துணி்ந்து நில்லுங்கள் பள்ளிகளை உடனடியாக திறப்பதற்கு துணை நிற்போம்,