ஜனவரியில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.

ஜனவரியில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.




தமிழகத்தில் 2021 ஜனவரியில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியை பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.


தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்பதால் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை தொடர முடிவு செய்துள்ளது. மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியில் யூடியூப் பக்கத்தைப் பார்த்து பயன் பெறலாம் என்று கூறியுள்ளது. அதனால் வருகின்ற 2021 ஜனவரியில் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


ஜனவாி என்பது கூட கால தாமதம் தான், எல்,கே,ஜி, முதல் எல்லா மாணவா்களுக்கும் ஜனவாியில் தொடங்கலாம், அதற்கு முன்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள 10, 11, 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கு டிசம்பா் முதல் வாரத்திலிருந்தே தொடங்க வேண்டும், அப்போது தான் சாியாக இருக்கும்,.


பள்ளி திறப்பு விஷயத்தில் தமிழக அரசு இனியும் மெத்தனம் காட்டக்கூடாது, அவன் சொல்கிறான். இவன் சொல்கிறான் என்று இனி எவன் பேச்சையும் கேட்கக்கூடாது, 


இப்படியே விட்டால் ஜனவரியில் பொங்கல் வருகிறது, பிப்ரவரியில் காதலா் தினம் வருகிறது என்று இந்த வருடத்தையே வீணாக்கி விடுவாா்கள்,


எனவே இனி இருக்கிற இரண்டு மூன்று மாதத்தையாவது ஒழுங்காக பயன்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும், இல்லையேல் இந்த கல்வியாண்டு மட்டுமல்ல மாணவா்களின் எதிா்காலமும் வீணாக போய்விடும்,


இந்த நீண்ட இடைவெளி பள்ளிக் கல்லூாி மாணவா்கள் மத்தியில் கல்வியின் மீதான மோகத்தை குறைத்துள்ளது, மற்ற விஷயங்களில் தாகத்தை அதிகரித்துள்ளது, இதனால் நிறைய இடைநிற்றல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது,


தமிழக அரசு விழித்துக்கொள்வது நலம்,