மாநில பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்....

மாநில பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்....


 மரியாதைக்குரிய சங்கத்தலைவர்கள் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.


 நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன். 


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வருகின்ற 27-11-2020 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் சரியாக 2 இரண்டு மணி முதல் 5 மணி வரை தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள தென்காசி  M.K.V.K. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் 
நமது சங்கத்தின் உறுப்பினர்கள் பள்ளி  நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் .


 அவர்கள் அனைவரோடும் குறிப்பாக திருநெல்வேலி தென்காசி  கன்னியாகுமரி தூத்துக்குடி விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட பள்ளி நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை சொல்லி நமது மாநிலச் சங்கத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டி மாநில தலைவர் பேராசிரியர்..ஏ. கனகராஜ் அவர்களும் மாநில  பொதுச் செயலாளர்  கே. ஆர். நந்தகுமார் அவர்களும் மாநில பொருளாளர் முனைவர். ஆர். நடராஜன் அவர்களும் . மாநில அமைப்பு செயலாளர் முனைவர்.பி. கல்யாணிசுந்தரம் மாநில துணைத்தலைவர் IIPE  S.R.
 அனந்தராமன் லிட்டில் பிளவர் மரிய சூசை மாவட்டத் தலைவர்கள் 
பெஸ்ட் ராஜா அக்கீம் ஆர. ஜெ. பெல். வக்கீல் திருமலை மவூத்தாஸிம்  பேராசிரியர் சீனிவாசன் உருமின் மொய்தீன்  முருகன் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பேச உள்ளனர்.


கூட்டத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் சொத்து வரி கட்டாமல் இருக்க பள்ளி வாகனங்களுக்கு இந்த ஆண்டுக்கான  சாலை வரி இருக்கை வரி  இன்ஷூரன்ஸ் விதி விலக்கு ஆணை பெறவும் பள்ளி வாகனங்களுக்கான எஃப் சி இந்த ஆண்டுக்கு விதிவிலக்கு  வழங்கவும்  பி. எஃப் இ.எஸ்.ஐ  சலுகைகள் பெறவும்  நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக்கவும் அங்கீகாரம் பெற்று பத்து ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெறவும் School  Building  DTCP Approved  Excemption  Order பெறவும்.... 


நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பள்ளிக் கல்வித்துறைக்கு நடத்தும் பாராட்டு விழாவில் மாண்புமிகு. தமிழக முதல்வர் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கும் மாபெரும்  மாநாடு நிகழ்ச்சி சம்பந்தமாக விவாதிக்கவும்
 நடக்க உள்ள மிக முக்கியமான கோரிக்கைகள் தீர்மானங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதால் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் சங்க தலைவர்களும் தவறாது கலந்து கொண்டு தங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கிட  நேரில் தென்காசி  MKVK   மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிக்கு
 வர வேண்டுமாய் அன்போடு இருகரம் கூப்பி அழைக்கின்றேன் .


என்றும் தங்களன்புள்ள
 கே .ஆர்.. நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.