டிடிசிபி பள்ளி கட்டிட அனுமதி உடனே வாங்குங்கள்....
16ஆம் தேதி பள்ளிகளை திறக்க தயாராகுங்கள்......
நமது சங்கத்தின் தொடர் கோரிக்கையை ஏற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 2011 க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு விதிவிலக்கு வாங்கி இதுவரை கட்டிட அனுமதியை வாங்காத பள்ளிகளும் அரசாணை எண்76 ன் படி ஒரு சதுர அடிக்கு 7 ரூபாய் 50 பைசா மட்டும் கட்டி கட்டிட அனுமதி பெறும் வகையில் விண்ணப்பித்துள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக கட்டிட அனுமதி வழங்க மாண்புமிகு துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்.
அரசாணை 76 ன் படி விண்ணப்பித்த
வர்களின் பள்ளிகட்டிடங்களை ஆய்வு மேற்கொண்டு கோப்புகள் உரிய ஆணைக்காக காத்துள்ளனர்.
யாரும் டிடிசிபி அனுமதிக்காக அதிகபட்ச கட்டணங்களை லஞ்சமாகவோ
வேறு பெயரிலோ எந்த பணமும் தர வேண்டாம் என்று மிகத் தெளிவாக துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்கள் நமது சங்க தலைவர் ஆர். எம் .கே. அவர்களிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
எனவே யாரும் எந்த காரணம் கொண்டும் யாரை நம்பியும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் .
பந்தா படோடாபம் பசப்பு வார்த்தைகளை நம்பி பணம் கொடுத்து ஏமாந்தால் அதற்கு இந்த மாநில சங்கம் பொறுப்பாகாது ..
அது உங்கள் தலைவிதி நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது...
வருகின்ற 16ஆம் தேதி நமது பள்ளிகள் எல்லாம் திறக்க வேண்டும் என்று இரண்டாவது முறையாக முதல்வர மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களிடம் முறையிட்டு பள்ளிகளை திறக்க அரசாணை வெளியிடப்
பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்க கூடாது என்று ஒரு கூட்டம் சதி செய்கிறது. பள்ளிகள் திறந்தாள்தான் நமக்கு மறுவாழ்வு என்பதை பள்ளி நிர்வாகிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே வருகின்ற 15ஆம் தேதி பள்ளிகளை திறக்க நாடு முழுவதும் பெற்றோர்களின் ஆலோசனைகளை கேட்டு கையெழுத்து வாங்கி அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் நீங்கள் சுணக்கம் காட்டினால் பள்ளிகளை திறக்க கூடாது என்று ஒரு கூட்டம் கையெழுத்து வாங்கியதாக சொல்லி உடனே திறக்க வேண்டிய பள்ளிகள் இன்னும் ஓரிரு மாதங்கள் தள்ளிப் போகும்.
எனவேதுணிவே துணையாகக் கொண்டு பள்ளிகளை திறந்து பாடம் நடத்தி நமது பள்ளிகளில் பணிபுரியும் அனைவரின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க அனைத்து பள்ளி நிர்வாகிகளும் உங்கள் பெற்றோர்களிடம் இன்றே கையொப்பம் வாங்கி பள்ளிகளை திறக்க விரைந்து செயல்படுங்கள் என்று அன்போடு வேண்டுகின்றேன்..
என்றும் தனியார் பள்ளிகளின் நலம் நாடும் உங்கள்
கே. ஆர். நந்தகுமார்.