வேலூா் மாவட்டத்தில் 130 நா்சாி பிரைமாி பள்ளிகளுக்கு ஒரே நாளில் அங்கீகாரம்....!

வேலூா் மாவட்டத்தில் 130 நா்சாி பிரைமாி பள்ளிகளுக்கு ஒரே நாளில் அங்கீகாரம்....!



நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள எந்த சங்கமும் செய்யாத அளவில் நமது .....


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டி பேனர்கள் வைத்து நமது கோரிக்கைகளை முன் வைத்தோம்.


 அமைச்சரின் கையால் தொடர் அங்கீகாரம் தர வேண்டும் என்பதை நிறைவேற்றினோம்.


 மெட்ரிக் பள்ளிகளுக்கு மட்டும் பள்ளிக்கல்வி அமைச்சர் தொடர் அங்கீகாரம் வழங்கியபோது நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வைத்தோம்.


 அதை உடனடியாக அமல்படுத்த தமிழ்நாடு முழுக்க அமைச்சர் உத்தரவிட்டார் ..


அதை ஏற்று நேற்று வேலூர் மாவட்டத்தில் 130 நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கப் பட்டுள்ளது,



 அங்கீகாரம் வழங்காத மாவட்டங்களிலும் உடனே வழங்க வரும் திங்கட்கிழமை அனைத்து சி இ ஓ அலுவலகங்களிலும் நமது சங்கத் தலைவர்கள் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கோரிக்கை மனுக்களை கொடுக்க உள்ளோம்.


 அனைத்து பள்ளிகளுக்கும் தொடர்அங்கீகாரம் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக்கவும் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களில் கையொப்பமிட்டு உங்கள் அங்கீகாரத்தை பெற நீங்கள் தான் வரவேண்டும்.


 நர்சரி பிரைமரி பள்ளிகள் மாவட்டத்திற்கு மாவட்டம் சிறுசிறு சங்கங்களாக சிதறுண்டு போய் சிலருக்கு எடுபிடிகள் பணம் வாங்கிக் கொடுக்கும் ஏஜென்டுகளாக செயல்படுவது இனியும் சரி வராது என்பதை சிந்தித்துப் பாருங்கள். .


மனமாச்சரியங்களை மறந்து அனைவரும் ஒன்றுபடுவோம் வாரீர் என்று வணங்கி வரவேற்கின்றேன். 


என்றும் தனியார் பள்ளிகளின் நலம் நாடும் உங்கள்
 கே. ஆர் .நந்த குமார்.