தமிழக முதல்வா் பங்கேற்கும் நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு தயாா் ஆவோம்....!.

தமிழக முதல்வா் பங்கேற்கும் நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு தயாா் ஆவோம்....!



மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய வணக்கம்.


திருப்பூர் ஈரோடு கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்ட மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா வருகின்ற 29 ஆஃப் தேதி மதியம் சரியாக இரண்டு மணிக்கு YMCA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பெருமாநல்லூர் கூட்ரோடு  திருப்பூரில் நடைபெறுகிறது.


நவம்பர்  3 ஆம் தேதி தென் மாவட்டங்களுக்கான தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா மதுரையில் நடைபெற உள்ளது.பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு தொடர் அங்கீகார ஆணையை வழங்கிடவுள்ளார்கள்.


அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் உங்கள் பள்ளிக்குரிய 4 சான்றுகளை வாங்கி சம்பந்தப்பட்ட டிஇஓ... சிஇஓ அலுவலகங்களில் முழுமையான கோப்புகளை கொடுத்து தொடர் அங்கீகாரம் பெற முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். 


நீங்கள் காலம் தாழ்த்தினால் பல்லாயிரக் கணக்கான ரூபாய்களை செலவு செய்து பல மாதங்கள் இழுக்கடிக்கப்பட்டு அங்கீகாரம் இல்லாமல் அலைகழிக்க படுவீர்கள் என்பதை உணருங்கள்.


நர்சரி பிரைமரி பள்ளி களுக்கு தொடர் அங்கீகாரம் பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களே வழங்கிட வேண்டும் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக்க வேண்டும்.


அங்கீகாரம் பெற்றுபத்தாண்டுகள் ஆன அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். எனும் அரசாணையை உடனே அமல்படுத்த வேண்டும்.


தனியார் பள்ளிகளுக்கான தனி இயக்குனரகம் தொடங்க போடப்பட்ட அரசாணையை உடனே அமல்படுத்த வேண்டும்.


 இணையவழி அங்கீகாரம் வழங்கும் அரசாணையை உடனே அமல்படுத்த வேண்டும்.


தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று நாளும் செயல்படுத்தும் 
நல்ல அரசுக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டு விழா வருகின்ற 2021 ஜனவரி மாதம் இரண்டாவது சனிக்கிழமை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் மாண்புமிகு. தமிழக முதல்வர் .மாண்புமிகு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் பங்கேற்கும் மாபெரும் நன்றி அறிவிப்பு மாநாட்டை நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில மாவட்ட தலைவர்கள் முன்னிலையில் பல்லாயிரக் கணக்கான  பள்ளி நிர்வாகிகள் பங்கேற்கும் மாபெரும் மாநாட்டை நடத்த மாநில தலைமைச் செயற்குழு முடிவெடுக்க அனைத்து பள்ளி நிர்வாகிகளும் ஒத்துழைக்க மேற்கண்ட தீர்மானங்களுக்கு ஆதரவளித்து உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்திட வேண்டும் என்று அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் .


அன்புடன் உங்கள் 
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.