வீடு தேடி வரும் அங்கீகாரம்: நாளை வேலூா் தருமபுாியில் அமைச்சா் வழங்குகிறாா்
பள்ளி தாளாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, வணக்கம்.
நமது சங்கத்தின் கோாிக்கையை ஏற்று முக்கியமான நான்கு சான்றிதழகளை வழங்கினால் ஒரு பைசா செலவில்லாமல் உடனடியாக உங்களை தேடி வந்தே அங்கீகாரம் வழங்குகிறேன் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் அவா்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் கடந்த வாரம் சென்னை திருவள்ளூா் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு வழங்கினாா்.
அதன் அடிப்படையில் இந்த வாரம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிளுக்கான தற்காலிக அங்கீகார ஆணைகளை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் 14.10.2020 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், காட்பாடி சன்பீம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கூட்ட அரங்கிலும்,
பிற்பகல் 2.00 மணிக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தர்மபுரி,பென்னாகரம் சாலையிலுள்ள ஸ்ரீவிஜய் வித்யாலாயா மெட்ரிகுலேன் மேல்நிலைப்பள்ளியிலுள்ள கூட்ட அரங்கத்திலும் தற்காலிக அங்கீகார ஆணை வழங்க உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுடன் பள்ளிக்கல்வி செயலாளர் திரு.தீரஜ்குமார் IAS அவர்களும் பள்ளிக்கல்வி ஆணையர் திரு.வெங்கடேஷ் IAS அவர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்
தருமபுாி மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் உயா் கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், மாவட்டஆட்சியா் எஸ். மலா்விழி மற்றும் கல்வித்துறை அதிகாாிகள் பங்கேற்கின்றனா்.
முதன்மை கல்வி அலுவலர் மூலமாக தங்களது பள்ளிகளுக்கு தகவல் தருவார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.