கொரோனா காலத்தில் சாலையில் ஓடாத பள்ளி வாகனங்களுக்கு வாி விலக்கு வேண்டுமா....?
தனியார் பள்ளி பஸ் வேன் உள்ளிட்ட வாகனங்களின் சாலை வரி இருக்கை வரி இன்சூரன்ஸ் F.C. செய்ய இந்த கொடிய கொரோனா நோய்த் தொற்று காலத்தில் சாலையில் இதுநாள் வரையில் ஓடாத காலங்களுக்கு விதிவிலக்கு வழங்கக்கோரி நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளது தாங்கள் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் வழக்கிற்கான தீர்ப்பு வரும் 5ஆம் தேதி திங்கட்கிழமை 43 வது வழக்காக இறுதித் தீர்ப்புக்கு வருகிறது.
100% தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகத்தான் இந்த தீர்ப்பு அமையும் என்று உறுதியாக நம்புகின்றோம்.
31. 12. 2020 வரை அபராத வட்டி இல்லாமல் வரிகள் கட்ட மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளதை தங்கள் கவனத்திற்கு பதிவு செய்கின்றேன்.
35.03.2020 முதல் 30. 09. 2020 வரை பள்ளி வாகனங்கள் சாலையில் ஓடாமல் நிறுத்தி வைத்துள்ளோம்.... என்பதற்கான Stoppage Permission Part A Form இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.
அனைத்து பள்ளி நிர்வாகிகளும் அதை பிரிண்ட் அவுட் எடுத்து ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனியாக முறையாக விண்ணப்பித்து விண்ணப்பத்தை இமெயில் மூலமும் நேரடியாகவும் திங்கட்கிழமை காலை பத்து மணிக்குள் கொண்டுபோய் MVI அல்லது RTO அலுவலகங்களில் உடனடியாக கொடுத்து அக்னாலேஜ்மென்ட் பெறுங்கள் திங்கட்கிழமை மாலை நல்லதொரு தீர்ப்பு வந்தவுடன் நிச்சயம் உங்களை சந்திப்பேன்.
உடனடியாக உங்கள் பள்ளியின் தொடர் அங்கீகாரம் பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்து 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மறந்துவிட வேண்டாம்.
பள்ளி வாகனங்கள் வாங்க கட்டிடங்கள் கட்ட கடன் வாங்கியவர்கள் தவணையும் வடியும் வடிக்க வடியும் கட்ட முடியாதவர்களைபாதுகாத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் நன்றியுடன் உங்கள்
கே.ஆர் .நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.