ஒன்றிணைந்து உயர்வோம் வாரீர்.......!

ஒன்றிணைந்து உயர்வோம் வாரீர்.......!


சங்கத் தலைவர்கள் அனைவருக்கும் இனிய  வணக்கம்.


நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.


மாநில மாவட்ட தலைவர்களின் மிக முக்கியமான அவசர ஆலோசனைக் கூட்டம் மிக விரைவில் சென்னையில் நடத்த ஏற்பாடு செய்துவருகின்றோம்...


மாநில தலைவர் பேராசிரியர் ஏ.கனகராஜ் அவர்களின் ஆலோசனையின் பேரில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


அதேபோல் மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் மாவட்ட துணைத்தலைவர்கள் மாவட்ட பொருளாளர்கள் 
நமது மாநில சங்கத்தில்அனைவரும் இணைந்து பணியாற்றும் வண்ணம் தங்கள் மேலான ஆலோசனைகளை தனித்தனியாக உங்கள் பெயரில் வழங்க வேண்டும். 


அதை எல்லாம் தொகுத்து நாம் நமது சங்கத்தின் அமைப்பு விதிகளாக விவாதித்து மாற்றி அமைப்போம்.


பொறுப்புகளை நிர்வாகிகளுக்கு தனித் தனியே பிரித்துக் கொடுப்பது என்று முடிவெடுத்து இருக்கின்றோம்.


இன்று முதல் ஒரு வார காலத்திற்குள்  ஒரு நாளைக்கு ஒருவரையாவது ஒவ்வொரு தலைவர்களும் உறுப்பினராக சேர்ப்பது. மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் வாட்ஸ்அப் குழுவில் இணைப்பது...


நமது சங்கச் செய்திகள் நாள்தோறும் பள்ளி நிர்வாகிகளுக்கு சென்று சேர வேண்டும். அனைவரையும் உறுப்பினராக்க வேண்டும். அமைப்பை பலப்படுத்த வேண்டும் அதற்கு தங்கள் மேலான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.


 தனி மரம் தோப்பாகாது ஒருவர் மட்டுமே உழைக்க முடியாது.


 ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் சரியான இடத்தில் சென்று சேரும்


 எனவே நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற 
தங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கிட வேண்டுமாய் அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.


சங்கம் வளர வளரத்தான் தனியார் பள்ளிகள் பலம் பெரும் நலம் பெறும் 
பலம் பெறும்.


நமக்குள் எந்தவித போட்டி பொறாமைகள் ஈகோ இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து உயர்வோம் வாரீர் என்று வணங்கி வரவேற்கிறேன்.


அன்புடன் உங்கள்


கே.ஆர்.நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.