இந்தாண்டு பள்ளியே நடக்கவில்லை என்றாலும் உங்களுக்கு உரிய ஆர்.டி.இ. கட்டணம் வந்துவிடும்

இந்தாண்டு பள்ளியே நடக்கவில்லை என்றாலும் உங்களுக்கு உரிய ஆர்.டி.இ. கட்டணம் வந்துவிடும்


அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 25% மாணவர்களை சேர்த்திட்ட வகையில் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்கள் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக இருந்த போது ரூபாய் 25 ஆயிரத்திலிருந்து 30,000 ரூபாய் வரை கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.


அவருக்குப் பின் வந்த பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். அவர்கள் ரூபாய் 11,500 முதல் 20 ஆயிரம் வரை நிர்ணயித்தார்கள்.


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அரசாங்கம் ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறது அந்த கட்டணத்தையே ஆர் டி இ கல்வி கட்டணமாக வழங்க வேண்டும் என்று வழக்கு போட்டுள்ளோம். 


இந்த நிலையில் 23. 9 .2020 அன்று இன்றைய பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திராஜ்குமார் ஐ.ஏ.எஸ். அவர்கள் ஒரு வகுப்புக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் உயர்த்தி ஒரு புதிய உத்தரவை போட்டுள்ளார்கள்... இதுவும் ஏற்க முடியாது என்று நாம் நீதிமன்றத்தில் இம்மாதம் 24-ஆம் தேதி நமது பதில் மனுவை தாக்கல் செய்வோம். அந்த உத்தரவையும் தங்களுக்கு அனுப்பி உள்ளோம்.


நமது சங்கத்தின் சாா்பில் சென்னை உயா்நீதி மன்றதில் வழக்கு தொடுத்ததன் விளைவாக 2018 =19 ஆண்டிற்கான கல்விக்கட்டண பாக்கி விரைவாக முழுமையாக பெற முடிந்தது. அதேப்போன்று 2019 /20 ஆம் ஆண்டிற்கான சல்விக் கட்டண பாக்கியை அக்டோபா் 24ஆம் தேதிக்குள் கட்டணத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்று உயா்நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது,


அதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளா் மேற்கண்ட ஆணையை வெளியிட்டுள்ளாா்கள். பள்ளிக் கல்வித்துறை இணை செயலாளா் ஜெயலலிதா அவா்கள் உயா்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இதை உறுதிப்படுத்தியுள்ளாா். அதனால் 2019 /20க்கான கட்டண பாக்கி இந்த மாதம் 25ஆம் தேதிக்குள் உங்கள் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு விடும்.


அடுத்த 2021 /22ஆம் கல்வியாண்டு முதல் நமது கோாிக்கையின் அடிப்படையில் ஆா்,டி,இ, சோ்க்கை நடைபெற்ற உடனே ஜீன் மாதம் 50% கட்டணமும் டிசம்பா் மாதம் 25% ஏப்ரல் மாதம் 25% கட்டணம் வழங்குவதாக வாக்குமூலம் வழங்கியுள்ளாா்.


எனவே இனி எதற்கும் கவலைப்படாதீா்கள். துனிச்சல் மிக்க நமது சங்கம் இருக்க வீணான பயம் எதற்கு...?


தனியார் பள்ளி வாகன சாலை வரி இருக்கை வரி இன்சுரன்ஸ்  எஃப்‌. சி. மார்ச் மாதம் 17 ம் தேதி முதல் பள்ளி வாகனங்கள் இயங்காததால் மேற்கண்ட வரிகளை கட்ட முடியாமல் தத்தளித்து வருவதால் நீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றோம். 


வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் 5.10. 2020 இல் வர உள்ளது. அதற்குள்ளாக அனைத்து பள்ளி நிர்வாகிகளும் உங்கள் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் உங்கள் பள்ளி வாகனங்களின் எண்களை போட்டு ஓடாத காலங்களுக்கு மேற்கண்ட வரிகளை வசூலிக்க கூடாது. வரிகளைச் செலுத்த முடியாது. பள்ளி வாகனங்கள் இயங்கவில்லை என்ற பொருளோடு ஒரு வேண்டுகோள் விண்ணப்பத்தினை உடனடியாக அனுப்பிவிட்டு எங்களுக்கு ஒரு நகலை தந்தால் நீதிமன்றத்தில் நாங்கள் அதையெல்லாம் சமர்ப்பித்து வாதாடுவதற்கு ஏதுவாக இருக்கும். எனவே உடனடியாக 24 மணி நேரத்திற்குள்ளாக அனைத்து பள்ளி நிர்வாகிகளும் ஒரு கோரிக்கை விண்ணப்பத்தை ஆர்.டி.ஓ க்களுக்கு அனுப்பிட வேண்டும் என்று மாநில சங்கத்தின் சார்பில் வேண்டுகின்றோம்.


இன்றைக்கு ஆர்.டி.இ மாணவர்கள் சேர்க்கை குலுக்கள் நடைபெற்றிருக்கும் முடிந்தவரை உங்கள் பள்ளியில்  எல். கே. ஜி..பிள்ளைகள் சேர வில்லை என்றாலும் வந்தவரை சேர்த்துக் கொள்ளுங்கள். யாரையும் வேண்டாம் என்று சொல்ல வேண்டாம். இந்தாண்டு பள்ளியே நடக்கவில்லை என்றாலும் உங்களுக்கு உரிய ஆர்.டி.இ. கட்டணம் வந்துவிடும் கவலைப்பட வேண்டாம்.


நன்றியுடன் உங்கள் 
கே ஆர் நந்தகுமார். மாநில பொதுச்செயலாளர்.