கொரோனா காலத்தில் கேள்விக்குறியான கல்வி,,,, மாநில பொதுச் செயலாளா் சிறப்பு பேட்டி,,,,,

கொரோனா காலத்தில் கேள்விக்குறியான கல்வி,,,, மாநில பொதுச் செயலாளா் சிறப்பு பேட்டி,,,,,



இந்த கொடிய கொரோனா நோய்தொற்று காலத்தில் தமிழகத்தில் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. மார்ச் 17ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடியே கிடக்கிறது. தேர்வுகள் நடக்கவில்லை ஆல் பாஸ் என்று அறிவித்துவிட்டார்கள்


.புதிய கல்வி ஆண்டில் குறிப்பாக எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பத்தாயிரம் நர்சரி பிரைமரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் புத்தகங்கள் வாங்கவில்லை... அவர்களுக்கு ஆண் லைன் வகுப்புகள் கூட சரியாக நடக்கவில்லை.


தனியார் பள்ளிகளில் நடக்கும் ஆன்லைன் வகுப்புகள் கூட வகுப்பறை கல்வி மாதிரி 100% நடக்கவில்லை. முழுமையான கல்வி அளவை எட்ட வில்லை கற்றலிலும் கற்பித்தலிலும் சோர்வு ஏற்படுகிறது. 


மாணவர்களும் ஆசிரியர்களும் நாளும்  கற்பதை உறுதி செய்ய முடியவில்லை. காலாண்டுதேர்வு கூட தனியார் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வழியே  பெயரளவுக்குத்தான் நடந்திருக்கிறது..டிசம்பரில் அரையாண்டு தேர்வு நடத்தியாக வேண்டும்.


இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் வாங்குவதில் பெரிய இடர்பாடுகள் உள்ளது. தமிழக அரசு கொரோனா காலத்திலாவது அனைவருக்கும் இலவசமாக பாடபுத்தகம் வழங்கி இருக்கலாம். அதுவும் செய்யவில்லை.


ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு கல்விக் கட்டணம் வசூலிப்பதற்கு நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுத் தான் நீதிமன்ற உத்தரவுப்படி ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. அதிலும் பல இடங்களில் இணையதள இணைப்புகள் கிடைக்கவில்லை.


புதிய பாடத்திட்டம் ஏற்கனவே கடினமாக உள்ளது என்ற பரவலான கருத்துக்களோடு  ஆசிரியர்களுக்கான  எந்தவித பயிற்சியும் கொடுக்காத நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி வசதியும் இல்லாமல் தொலைக்காட்சி வழியாக கல்வி கற்பிப்பதற்காக சொன்னாலும் எந்தவித கண்காணிப்பும் இல்லாததால் தொலைக்காட்சி வழங்கும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட யாராலும் எந்தக் கேள்வியும் கேட்க தொலைக்காட்சி வழி கல்வி கற்பித்தலில் முழுமையான பயன் தரவில்லை என்பதுதான் 100% உண்மை.


மாணவர்களும் 7 மாதங்களுக்கு மேலாக வீட்டுச் சிறையில் அடைபட்டு இன்று தெருக்களில் விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


50 சதவீத சம்பளம் கூட சரிவர கிடைக்காமல் ஆசிரியர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி எப்பொழுது பள்ளி திறக்கும் என்று ஏக்கத்தோடு காத்து இருக்கிறார்கள். பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறந்து ஆகிவிட்டது. சமூக இடைவெளி யோடு அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பள்ளியை திறந்து கல்வி கற்று வருகிறார்கள்.


பள்ளி நிர்வாகிகளும் தங்களிடம் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழுசம்பளம் தர முடியாமல் கடன் வாங்க முடியாமல் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.


தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஓட்டுநர்கள் உதவியாளர்கள் என பலரும் தினசரி கூலி வேலைகளுக்கு போகத் தொடங்கி விட்டார்கள்.


சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன 40% கல்வி கட்டணம் கூட பெற்றோர்கள் 50% பேர் கூட கட்டவில்லை. அடுத்துள்ள கட்டணமும் கட்ட மறுக்கிறார்கள். காரணம் பள்ளி எப்போது திறக்கும் என்று தெரியாது. அந்த சிந்தனையே இல்லை என்று தொடர்ந்து கல்வி அமைச்சர் நாள்தோறும் சொல்வதால் இந்தாண்டு பள்ளி திறக்காது எதற்காக நாம் பணம் கட்ட வேண்டும் என்று கட்டாமலும் அரசாங்கம் எல்லாம் இலவசமாக தருகிறது .இந்த ஆண்டு அரசு பள்ளியில் சேர்க்கலாம் என்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசு பள்ளிகளில்  சேர்த்து வருகிறார்கள்.


அரசும் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களையும் மாற்றுச் சான்றிதழ் கூட வாங்காமல் பழைய புதிய கல்வி கட்டணம் எதுவும் செலுத்தாமல் EMIS ல் மாணவர்களின் தகவல்களை அதிகாரிகள் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தெரிவிக்காமலேயே 15 லட்சம் மாணவர்களை சேர்த்து விட்டதாக நாள்தோறும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.


புதிய பாடத்திட்டத்தின் படி பாடங்களை நடத்தி வருகிறார்கள். 


பாடங்களை குறைப்பதற்காக வல்லுனர் குழு அமைத்து அவர்கள் அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்து மாதங்கள் பலவாகி ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 40 சதவீத இடங்களை குறைத்ததாக பத்திரிக்கைகளில் தகவல் தந்துவிட்டு எந்த 40% பாடங்களை குறைத்தார்கள் எந்த பாடங்களில் குறைத்தார்கள் என்கிற விவரம் ஏதும் தெரிவிக்காமல் நாங்கள் அரசு பள்ளிகளில் 60% பாடங்களைத்தான் நடத்துகிறோம் என்று சொல்வது எப்படி சரியாகும் .


அந்தப் பாடங்களில் எது என்றாவது சொல்ல வேண்டுமல்லவா...


எப்பொழுது பள்ளி திறப்பார்கள் முழு ஆண்டுத் தேர்வு நடக்குமா நடக்காதா சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் ஆல்பாஸ் என்று சொல்லி   விடுவீர்களா.... ?


மருத்துவம் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு மாணவன் எப்போது எப்படி தயாராக முடியும்.


நீட் தேர்வு தொடங்கப்பட்டது முதல் இதுவரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 180 பேர் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளதாக மருத்துவ கவுன்சில் தனது அறிக்கையில் வெளிப்படுத்தி உள்ளது.


இந்நிலையில் பள்ளிகளை திறக்காமல் இனியும் வஞ்சிக்க வேண்டாம்.


பள்ளிகள் திறக்காமல் காலம் தாழ்த்த தாழ்த்த மாணவர்கள் அனைவரும் தங்கள் குலத்தொழிலுக்கு திரும்புவார்கள். பள்ளிகளைத் திறக்காமல் கால் நமது அடுத்தடுத்த பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை உருவாக்கி இடைநிற்றல் அதிகரிக்கும் கல்வி சிறந்த தமிழ்நாடு அதன் பெருமையை இழக்கும். ...
இன்று கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.


கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.