கொடிய கொரோனா காலத்தில் தனியாா் பள்ளிகள் பட்ட கஷ்டங்கள்..... அதை சிக்கலின்றி தீா்த்து வைத்த ஒரே சங்கம் நந்தகுமாா் தலைமையிலான சங்கம் தான். ஒரு சிறப்பு ரிப்போா்ட்.......
தமிழகத்தில் இயங்கும் தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் நாளும் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக தொடர்ந்து அரசின் கவனம் ஈர்க்கும் பொருட்டும் பள்ளி நிர்வாகிகள் என் மன வேதனைகளை போக்கி தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காக மெட்ரிக்குலேசன் நியூஸ் தொடர்ந்து பள்ளி நிர்வாகிகளுடன் பயணித்து அவர்கள் படும் வேதனைகளை அரசுக்கும் மக்களுக்கும் அனுதினமும் தொிவித்து வருகிறது.
அதன் தொடா்ச்சியாக இந்த கொரோனா காலத்தில் நமது சங்கம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் பள்ளி நிா்வாகிகள் காப்பாற்றப்பட்டுள்ளன., இது தொடா்பாக மாநில பொதுச் செயலாளா் திரு. கே.ஆா். நந்தகுமாா் அளித்த பேட்டியின் தொகுப்பு உங்கள் பாா்வைக்கு......
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் தீமை கஞ்சாது எல்லோரும் எல்லாம் பெற்று இன்பமாக வாழவும்..எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வமென பாரதியின் கனவை நனவாக்க போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் ஏற்றமிகு கருத்து ஒன்று உண்டெனில் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்.. என எழுதப்பட்ட கட்டுரை தான் இது....
தனியார் பள்ளிகள் என்றாலே பலருக்கும் பல ஊடகங்களுக்கும் அவர்கள் ஏதோ கொள்ளைக்காரர்கள் போல் சித்தரிக்கிறார்கள்.அவர்கள் படுகிற வலிகளும் வேதனைகளும் பட்டவர்களுக்கு தானே தெரியும்.
கொரோனா நோய்த் தொற்று கிருமி தமிழகத்தில் வந்த பின்னால் மார்ச் 17ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கவில்லை பாடங்களும் தேர்வுகளும் நடத்தவில்லை.... அதனால் மாணவர்கள் சென்றாண்டு கட்ட வேண்டிய கல்வி கட்டண பாக்கி அப்படியே நிலுவையில் நின்றுவிட்டது .அதை நம்பி வாங்கிய கடனுக்கு வட்டியும் தவனையும் கட்ட முடியாமல் 80 சதவீத பள்ளிகள் வாழும் வழி தெரியாமல் வக்கற்று நிற்கிறார்கள்.
தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. ஐ.சி.எஸ்.இ. ஐ.பி கேம்பிரிட்ஜ் பிளே ஸ்கூல்ஸ் கிண்டர்கார்டன்ஸ் என பள்ளிகள் பல இயங்கி வருகின்றன.
இப்பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் செய்வதறியாது திக்குத் தெரியாத காட்டில் திணறுகிறார்கள்.
இந்த வாகனங்களை நம்பி உதிரி பாகங்கள் விற்போர் பெயிண்ட் அடிப்போர் மெக்கானிக் வேலை செய்பவர்கள் எலெக்ட்ரிசியன்கள் பள்ளி வாகனங்களில் சீட்டு தைப்போர் பஞ்சர் பார்ப்போர் காற்று பிடிப்போர் என ஏராளமானவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்.
ஐம்பதாயிரம் வாகனங்களுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு டீசல் ஆயில் போட்டு சாலைகளில் இயக்கி அரசின் வருமானத்தை கூட்டி இருப்பார்கள்..... அதனால் அரசுக்கு ஜிஎஸ்டி சேல்ஸ் டாக்ஸ் சர்வீஸ் டாக்ஸ் சாலை வரி இருக்கை வரி இன்சூரன்ஸ் என பல வரிகள் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் வந்திருக்கும்.
மாணவர்களுக்கு தேர்வு நடத்தவில்லை பதினோராம் வகுப்பு வரை மட்டுமல்ல பல்கலைக்கழகம் வரை ஆல் பாஸ் என்று அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் கட்ட வேண்டிய கல்வி கட்டண பாக்கி ஒரு பைசா வசூல் ஆகவில்லை.
மாணவன் படிப்பதை நிறுத்தக்கூடாது படித்ததை மறந்து விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது அதற்கும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உதிரிக் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததன் காரணமாக நீதிமன்றம் சென்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வழக்காடி ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதி பெற்று அதற்கும் வழிமுறைகள் அமைக்கப்பட்டு தனியார் பள்ளிகளில் தரமான கல்விப் பணியை பள்ளிகளிலிருந்து வீடுகளுக்கே கொண்டுசென்று சேர்த்திருக்கிறோம்.
ஆன்லைன் எஜுகேஷன் பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருந்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதத்தை பார்த்தும் ஆசிரியர்கள் படும் கஷ்டங்களை பார்த்தோம் அவர்கள் பிள்ளைகள் செய்யும் சேட்டைகளை பார்த்தும் இருப்பதை கொடுங்கள் இருக்கும்போது கொடுங்கள் எனும் பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று இருப்பதை கொடுத்து வருகிறார்கள்.
பள்ளிகல்வி அமைச்சரும் நாள்தோறும் ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஒவ்வொருவிதமான செய்திகளை தனியார் பள்ளிகளுக்கு எதிராகவே கல்விக்கட்டணம் கேட்க வேண்டாம் பெற்றோர்கள் கட்ட வேண்டாம் மீறி வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாள்தோறும் அந்த அறிக்கையின் காரணமாக கல்வி கற்பதில் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு நீதிமன்றம் சென்று வழக்காடி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் 40 சதவீதமும் அடுத்து வரக்கூடிய காலங்களில் 35 சதவீதமும் கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் 25 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும் என்று நீதிப்பேராணை வெளியிடப்பட்டது
அரசு இரண்டு ஆண்டுகளாக தரவேண்டிய ஆர்.டி.இ. கல்விக்கட்டண பாக்கியும் தராமல் காலம் தாழ்த்தியதால் நீதிமன்றம் சென்று பெற்றோம். அதிலும் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு 40% தரவில்லை அதற்கு ஒரு தனி வழக்கு தனி அரசாணை தனியாக பணம் விடுவிப்பு இன்றைக்கும் 19 ...20 ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டணபாக்கி வரவில்லை. அதற்கான தனிவழக்கு நடத்தி கல்வி கட்டண பாக்கிக்காக காத்திருக்கின்றோம்.
தமிழ்நாடு முழுக்க ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதார நிதி கேட்டு நீதி கேட்டு ஒரு நாள் உண்ணாவிரதத்தை மிகப்பிரம்மாண்டமான முறையில் அனைத்து பள்ளிகளும் நடத்தினார்கள்.
அரசு தொடக்க பள்ளிகளில் 50 பேர் இருந்தாலும் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துகிறார்கள் அதேபோல் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தக் கோரி நீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றோம்.
அதேபோல் 200 நாட்களுக்கு மேலாக ஓடாத காலங்களுக்கு பள்ளி வாகனங்களுக்கான சாலை வரி இருக்கை வரி இன்சூரன்ஸ் எஃப் .சி செய்வதற்கு விதிவிலக்கு வேண்டுமென்றும் 100% அபராதத் தொகையுடன் சாலை வரி கட்ட வேண்டும் என்பதை நீக்க வைத்தும் நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடி வரும் சங்கம்.
தொடர்அங்கீகாரம் தருவதற்கு பள்ளிக்கல்வி தொடக்கக் கல்வி மெட்ரிக் கல்வி இயக்குனரகம் செய்துவரும் காலதாமதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து உடனடியாக அனைவருக்கும் 20.10 2020 க்குள் தொடர் அங்கீகாரம் வழங்கவும் அரசாணையை பெற்றுத்தந்த மாநில சங்கம்.
தனியார் பள்ளி கட்டிடங்கள் மட்டும் பள்ளி கட்டிட அனுமதி பெற வேண்டும் என்கிற அரசாணைக்கு எதிராக சங்கத்தின் சார்பில் வழக்கடப்பட்டு 2011 க்கு முன்னர் கட்டப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விதிவிலக்கு பெற்றுத்தந்த சங்கம் இந்த சங்கம்.
கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளுக்கு இரண்டு ஆண்டு காலம் அவகாசம் வழங்கி அங்கீகாரம் வழங்க ஆணை பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் இருக்கிற பள்ளிகளில் இருக்கிற நிலையிலேயே பள்ளி கட்டிட அனுமதி வழங்க அரசாணை எண் 76 வெளியிடப்பட்டு இன்றைக்கு பள்ளிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு கட்டிட அனுமதி பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய இந்த சங்கத்தை பள்ளி நிர்வாகிகள் நன்றியோடு நினைவு கூறுகிறார்கள்.
தனியார் பள்ளிகள் மட்டும் சொத்து வரி நிலவரி .நீர்வரி.. தொழில் வரி இ.எஸ்.ஐ பி.எப் கிராஜுவிட்டி சாலை வரி இருக்கை வரி இன்ஷூரன்ஸ் எப்.ஸி பள்ளி வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்த வேண்டும் பள்ளி வாகனங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும்
ஆண்டுதோறும் கட்டிட உரிமைச் சான்று உறுதிச் சான்று சுகாதாரத்துறை தீயணைப்பு துறை தடையின்மை சான்று முப்பதாண்டுகள் குத்தகை பதிவு சான்று என்று பல்வேறு சான்றுகள் பெறுவதற்கு பல லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பல முறை இழுத்தடித்து ஆண்டுதோறும் ஆய்வுகள் சான்றுகள் பெற்று அங்கீகாரம் பெறவேண்டும் என்பது எவ்வளவு பெரிய வீண் அலைச்சல் மன உளைச்சல் பணக்கஷ்டம் சட்டவிரோதமான லஞ்சம் இவர்களை நினைத்தால் நெஞ்சம் வெடிக்கும் அளவுக்கு பள்ளி நிர்வாகிகள் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு இந்த கொடிய கொரோனா காலத்தில் அதைவிடக் கொடுமையான அதிகாரதுஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டு 50க்கும் மேற்பட்டோர் இறந்துபோனார்கள் என்கிற வேதனையான செய்தி ஓரு பக்கம் ஆசிரியர்கள் பலரும் அவர்கள் வீட்டில் உள்ள பலரும் வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் தெருவோரங்களில் கூலி வேலைகளுக்கு வந்துவிட்டார்கள் பல கிராமங்களில் விவசாய கூலிகளாக மாறிவிட்டார்கள் பல மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் பரிதவித்து குழந்தை தொழிலாளர்களாகவே மாறிவிட்டார்கள்.பலர் ஒரு சில காசுகளை பார்த்துவிட்டு குலத்தொழிலுக்கே திரும்பிவிட்டார்கள் .
பல பள்ளி நிர்வாகிகள் வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல் தத்தளித்து வருகிறார்கள் அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் பள்ளிகள் திறக்காமல் 10 காசு வசூலிக்க முடியாமல் தத்தளித்து வரும் வேளையில் கழுத்தை பிடித்து நெறிக்கும் காரியத்தை செய்து வருகிறார்கள் பலர் பள்ளிக்குசீல்வைப்போம் என்று நகராட்சி மாநகராட்சி ஊராட்சி அதிகாரிகளும் பள்ளி வாகனங்களை எடுத்துச் செல்வோம் என தனியார் பைனான்ஸ் ஊழியர்களும் வட்டிக்கு வட்டி போட்டு வசூலிக்க பள்ளிவாசலில் அவமானப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் இந்தக் கொடுமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நமது சங்கம் நீதி கேட்டு நிற்கிறது.
இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் தனியார் பள்ளி நிர்வாகிகளின் அனுமதி பெறாமல் இ எம் ஐ எஸ் ஸலிருந்து மாணவர்களின் ஆதாரங்களை திருடி வைத்துக்கொண்டு டிசி வாங்காமல் அவர்களே டிசியை திருடிக்கொண்டு மாணவர்கள் 16 லட்சம் பேரை அரசுப் பள்ளிகளில் சேர்த்து விட்டதாக ஒரு பெரிய உண்மையும் பொய்யும் கலந்த செய்தியை சொல்லி பள்ளி நிர்வாகிகளின் தலையில்இடி இடிக்க செய்திருக்கிறார்கள்.
அரசே அரசின் சட்ட திட்டங்களை மீறி நடக்கும் அவலங்களை என்னவென்று சொல்வது அதை தடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையாளர் அலுவலகம் முன்பு மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மூலம் அமைச்சர்கள் அதிகாரிகளை சந்தித்து பேசியிருக்கிறோம். பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. சில பெரிய பள்ளி முதலாளிகள் முதலைகளை போல் சிறிய பள்ளி நிர்வாகிகளை அழிக்க பார்ப்பதும் ஒருபுறம் நடந்து வருகிறது.இதுதான் இன்றைய தனியார் பள்ளிகளின் உண்மை நிலை என்பதை இந்த உலகிற்கு உரக்கச் சொல்வோம்.
அரசு தனியார் பள்ளிகளை தத்தெடுக்காமல் எடுப்பார் கைப்பிள்ளை போல் ஏமாற்றுவது தனியார் பள்ளிகளுக்கு சுண்ணாம்பும் அரசு பள்ளிகளுக்கு வெண்ணையும் வைக்கக்கூடிய காரியத்தை செய்து கொண்டுள்ளதால் தனியார் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் படிக்கும் மாணவர்கள் படிக்க வைக்கும் பெற்றோர்கள் பள்ளியை நிர்வகிக்கும் நிர்வாகிகள் என ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி அடுத்து வரும் தேர்தலில் நமக்கு ஆளும் கட்சியும் வேண்டாம் எதிர்க் கட்சியும் வேண்டாம் என்ன செய்யலாம் யாருக்கு வாக்களிக்கலாம் என்று சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள்.
இனியும் அரசு காலம் தாழ்த்தாமல் தனியார் பள்ளிகளுக்கு தொல்லை தராமல் இருந்தால் மட்டும்தான் அரசுக்கு நல்லது அரசின் பெரும் பணச் சுமையை குறைத்து பணிச்சுமையை குறைத்து லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தந்து கோடிக்கணக்கான வர்களுக்கு தரமான கல்வி தந்து கல்வி சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க உழைத்துக் கொண்டிருக்க கூடிய நல்ல கல்வியாளர்களை பாராட்ட வேண்டும் ஊக்கப்படுத்த வேண்டும்.
கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்யாத அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பாக்கி இல்லாமல் தரக்கூடிய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாயை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கி அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று சொல்லக்கூடிய அரசு எத்தனை பேரை மருத்துவ நுழைவுத்தேர்வாம்நீட் தேர்வில் வெற்றி பெற செய்திருக்கிறார்கள்.
அரசுக்கு ஒரு பைசா செலவில்லாமல் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை மருத்துவராக்கி வரக்கூடிய தனியார் பள்ளிகளின் பணியை எண்ணிப்பாருங்கள் மருத்துவம் மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள அனைத்துக்கும் சகலகலா வல்லவர்களை உருவாக்கி சாதனை படைத்து வரும் தனியார் பள்ளிகளால் அரசுக்கு என்ன நஷ்டம் ஏன் எல்லோரும் தரமான கல்வி கற்பதை தடுக்கிறீர்கள்.
தனியார் பள்ளி நிர்வாகிகள் இனி அரசை கேள்வி கேட்கமாட்டார்கள் போராட மாட்டார்கள் என்கிற எண்ணங்களை துடைத்து எறியுங்கள் அவர்களும் வீதிக்கு வந்து விட்டார்கள்.
அரசு அலுவலகங்களில் அனைத்து சான்றிதழ்களும் பெற லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பலமுறை இழுலத்தடிக்கப்பட்டு மூன்றாண்டு தர வேண்டிய சான்றிதழ்கள் ஓராண்டு மட்டும் தந்து தொடர் அங்கீகாரம் தராமல் இனி ஏமாற்ற முடியாது.
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் நிர்ணயிப்பதில்கூட ஒரு நியாயம் இல்லை அரசு ஒரு மாணவனுக்கு ஆண்டுக்கு ரூபாய் 35 ஆயிரம் செலவழிக்கிறது. தனியார் பள்ளிகள் மட்டும் ஐந்தாயிரம் பத்தாயிரம் வாங்கிக்கொள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் அரசு போடும் ஆணைகளே முன்னுக்குப்பின் முரண் பாடு முரண்பாடுகளின் மொத்த உருவமாக பள்ளிக்கல்வித்துறை மாறிப்போனது யாரால் அதை இனியும் அனுமதிக்க முடியாது என்று பள்ளி நிர்வாகிகள் ஆர்த்தெழ தொடங்கிவிட்டார்கள்...
இத்தனை கொடுமைகளும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்ந்து தந்து கொண்டே இருந்தால் இனியும் பொறுப்பதற்கில்லை எரிதழல் கொண்டு வா என எந்த ஊரில் எங்கே தவறுகள் நடந்தாலும் அங்கே தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக போராடுவது என்று முடிவெடுத்து இருக்கிறோம்.
தனியார் பள்ளிகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவது போராடுவது தனியார் பள்ளிகளின் உரிமைகளை நிலை நாட்டுவது மாணவர்கள் பெற்றோர்களின் நலம் ஒன்றே எங்கள் தாரக மந்திரம் என்று சிம்மக் குரலில் கர்ஜித்தார் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார்.