தொடா் அங்கீகாரத்திற்கான பணிகளை உடனே தொடங்குங்கள்.....
அனைவருக்கும் வணக்கம் நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.
பள்ளிக் கல்வித் துறை ஆணையாளர் .சிஜி தாமஸ் வைத்தியநாதன் ஐஏஎஸ் அவர்கள் மாற்றப்பட்டு திரு. வெங்கடேஷ். இ..ஆ..ப. அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுதும் தனியார் பள்ளிகளுக்கு டிடிசிபி கட்டிட அனுமதி உள்ள பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கும் கட்டிட அனுமதி இல்லாத பள்ளிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் தொடர் தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
4 சான்றுகள் இருந்தால் போதும்எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் அனைத்து பள்ளிகளுக்கும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக தொடர் அங்கீகாரத்தை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் பள்ளி கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன் அவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் முனைவர். கருப்புசாமி அவர்கள் நேரடியாக வந்து பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கி வருகிறார்கள்.
தனியார் பள்ளி நிர்வாகிகள் உடனடியாக உங்கள் பள்ளியின் நான்கு சான்றுகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்து நாள்தோறும் பார்த்து உடனடியாக அங்கீகாரத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்.
நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு இதேபோல் தொடர்அங்கீகார அணையை வழங்கிட வேண்டும். ஆனால் சில மாவட்டங்களில் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு என்கிற பெயரில் பள்ளி நிர்வாகிகளை அலைகழிக்கப்பட்டும் குறைகளை சொல்லியும் பள்ளிக்கு ஏற்றார்போல் பணத்தை வாங்கிக்
கொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயவு செய்து அந்த தவறை செய்யாமல் இந்த கொடிய கொரோனா நோய் தொற்று காலத்தில் நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகிகள் ஒரு பைசாகூட கல்வி கட்டணம் வசூலிக்க முடியாமல் சான்றுகள் பெற பல்லாயிரக்கணக்கில் லஞ்சம் கொடுத்து சான்றுகள் வாங்கியும் வாங்க முடியாமலும் தவித்து வருகிறார்கள் இதையெல்லாம் மனதில் வைத்து மனிதாபிமானத்தோடு செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் போல் நேர்மையாக செயல்பட்டு நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களை பணிவோடு வேண்டி கேட்டுக் கொள்கின்றோம்.
பள்ளி நிர்வாகிகள் உங்கள் மாவட்டத்தில் எந்த அதிகாரிக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
இதையும் மீறி யாராவது பணம் கேட்டால் உடனடியாக நீங்கள் புகார் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நமது சங்கம் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் உடனடியாக அனைவருக்கும் தெரிவியுங்கள்.
தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக உள்ள அனைத்து முதன்மை கல்வி மாவட்ட கல்வி வட்டார கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் என்றென்றும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
என்றும் கல்வி பணியில் உங்கள்
கே. ஆர் .நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.